பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 195 போர் முடிந்தது. இரண்டாவது உலகப்போரில் பிரிட்டிஷ் கூட்டணி நாடுகள் வெற்றி பெற்றன. வெள்ளையர் எல்லாம் களிப்புடனாடிப் பாடினார்கள் அதனால், அன்றுவரை பாதுகாப்புக் கைதிகளாக, விசாரணையற்ற கைதிகளாக, சிறைவைக்கப்பட்டிருந்த எல்லாக் காங்கிரஸ் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை ஆனார்கள். தலைவர் காமராஜ் அவர்களும் 1945-ஆம் ஆண்டுதான் விடுதலையானார். அந்தச் சிறைவாசம்தான் காமராஜின் கடைசி சிறைவாசம் அதற்குப் பிறகு அவர் சிறைவாசம் செல்லவேண்டிய அவசியம் நேரவில்லை நாடும் விடுதலை பெற்றுவிட்டது. சிறை மீண்ட காமராஜருக்கு வரவேற்பு! திருநெல்வேலிசந்திப்பு:மக்கட்கூட்டம் திரள்திரளாகக்குழுமின: எங்கு பார்த்தாலும் ஒரே.ஆரவார ஜே கோஷம் மகாத்மாகாந்தியடிகள் வாழ்க! வந்தே மாதரம் பாரத மாதாகி ஜே என்ற முழக்கங்கள் மண்ணை அதிர வைத்தன! மூவண்ண ராட்டைக் கொடி பறக்கும் கைகள் ஒர்புறம் மலர் மாலைகளோடும் பூச்செண்டுகளோடும் வந்திருந்த மக்கள் மற்றோர் புறம்: இரயிலிலே இருந்து இறங்கினார் காமராஜ. சிறையிலே இருந்து விடுதலை பெற்ற காமராஜ் ரயிலிலிருந்து சிரித்தபடியே இறங்கியதைக் கண்டு மக்கள் கும்பல்கள் சூழ்ந்து கொண்டன: ஜே ஜே ஜே என்று மக்கள் கோஷங்களை எழுப்பிக் கொண்டு, திணறியபடியே சிக்கினர் நெரிசல் கூட்டங்களில் நகர்ந்து வரும் கூட்டம் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தைக் கடந்தபோது, முன் பின் பாராத பெரிய மனிதர்கள் வந்து ஒருவர் பின்னொருவராகச் சூழ்ந்து கொண்டார்கள் எங்கே போகிறது இந்தக் கூட்டம்? என்று கூட்டத்தை நடத்தும் நண்பர்களை கேட்டார்கள். தேச பக்தர்கள் ஊர்வலங்கட்கு அக்காலத்தில்அவ்வளவு பெரிய மரியாதை இருந்தது! வழக்குரைஞர் நாடார் ஒருவரின் பெயரைக் கூறியதைக் கேட்ட காமராஜ் அவர்கள், அடிபட்ட நாகம்போல் சீறினார் "திருப்புங்கள் வண்டியை தேசத்துரோகியின் வீட்டுக்குவரமாட்டேன் தண்ணீரும் குடிக்கமாட்டேன்! திருப்புங்கள்.காரை' என்று பாம்பை மிதித்தவன் அலறுவதைப் போல அலறினார். தேசத் துரோகி வீட்டில் தண்ணீரா? கார் திரும்பியது ஏன்? வழக்குரைஞர் நாடார் யார்? எதற்காக அவரிடம் தண்ணீர்கூட குடிக்க மாட்டேன் என்றார்.தலைவர், என்ற விவரமெல்லாம் மக்களுக்குப் புரிந்தது!