பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 96 தேசியத் தலைவர் காமராஜர் உடனே, கொட்டும் மேளதாளப் பாடல்களோடும் நாதசுர இசைகளின் கம்பீரமான நீண்ட இசைகளோடும், திருச்செந்தூர் சாலையிலே சென்று கொண்டிருந்த கார், ஊர்வலம், தலைவர் - தொண்டர்களின் வரிசைகள் எல்லாம் - நாங்குனேரிச் சாலைக்கு நகர்ந்தனர். வழியிலே பயணிர் விடுதி களைப்புடன் வந்தோர் - இளைப்பாறினார்கள்! “தேசத்துரோகி வீட்டில் தண்ணீர்கூட குடிக்க மாட்டேன்” என்று சூளுரைத்தாரே அவர் யார்? எதற்காக அவ்வாறு கூறினார் காமராஜ் என்றால், அந்த வழக்குரைஞர்நாடார்வெள்ளையர்ஆட்சியிலே அரசு வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1937-ஆம் ஆண்டில் அவர் காங்கிரஸ்காரராக இருந்தவர் 1942-ஆம் ஆண்டில், ஆட்சியின் கைக்கூலியாக இருக்க இணங்கியவர்: குலசேகரப்பட்டினம் கொலை வழக்கில் அரசு வழக்குரைஞராக இருந்தவரும் அவர்தான் இரண்டு காங்கிரஸ் நாடார்களைத் தூக்கு மேடைக்கும், 30 காங்கிரஸ் கட்சிக்காரர்களை ஆயுள் தண்டனைக் கைதிகளாக்கிச் சிறைக்கு அனுப்பியவரும் அதே அரசு வழக்குரைஞர்தான் குலசேகரப் பட்டினம் கொலை வழக்கு: குலசேகரப் பட்டினம் கொலை வழக்கு திருநெல்வேலியில் தனி நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தது. அப்போது பொதுமக்கள் பணத்திலே தியாகிகளுக்கு உள்ளே பழம், காப்பி, டீ, வாங்கிக் கொடுத்தபோது, அவற்றையெல்லாம் தடுத்தவரும் இதே நாடார்தான்! இப்படிப்பட்ட ஒரு நாட்டுத் துரோகியின் வீட்டில் காங்கிரஸ்காரன் தண்ணிர் அருந்துவானா? அவர் இல்லத்துவாசல் மண்ணைத்தான் மானமிருந்தால் மிதிக்கலாமா? ஆங்கிலேய அரசு வழக்குரைஞராக அவர் பணியாற்றிய அந்தக் குலசேகரப் பட்டினக் கொலைவழக்கில்இரண்டு பேரைத்துக்குமேடையிலேநிறுத்தினார் அந்த இரண்டு பேர்கள்தான் தூக்குமேடை ராஜகோபாலனும், காசிராஜனும் என்பதை எண்ணுகிறபோது நமது மனம் நமக்கே சவாலாகி விடவில்லையா? பதவி ஒன்றுக்காக நம்மையே விற்றுப் பல்லிளித்து மானத்தை விற்பவனாமனிதன் அவனிடம்தண்ணீர்அருந்துபவனுக்குமானம் என்ன செத்தா போய் விட்டது? காமராஜர் சொன்னபின் மற்ற காங்கிரஸ் தொண்டர்கள் எண்ணியவைதான் இவை.