பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 197 தொண்டு என்றால் என்ன பொருள்? ஒரு கட்சியின் தலைவருக்கு நல்ல தொண்டனாய் எவன் விளங்குகின்றானோ, அவனுக்கு நல்ல தொண்டர்கள் நாடிவந்து நின்று சேவை செய்வார்கள் என்பது தொண்டின் இலக்கணமாகும். தொண்டு என்றாலே வளைவு என்று தானே பொருள்: 1929-ஆம் ஆண்டிலேயே காங்கிரசை விட்டு விலகியவர் எஸ். சீனிவாச ஐயங்கார். அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பினார். இதற்குச் சிலர் முயற்சி எடுத்துக் கொண்டு பணியாற்றினார்கள். இந்த முயற்சியிலே ஈடுபட்டவர்களுக்குப் பெயர் அபேதவாதிகள்: இந்த அணி, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்த அணி இந்த அபேதவாதிகள் குழு சீனிவாச ஐயங்காரிடம் சென்றது. காங்கிரஸ் கட்சியில் சேர அவரை ஆதரிப்பவராகவும், தலைவர்காமராஜரும், தொண்டரணிகளும் ஆதரிக்க முன் வந்திருப்பதாகவும் - அபேதவாதிகள் அய்யங்காரிடம் அறிவித்தனர். இரண்டு அணிகளும் சீனிவாச ஐயங்காரை ஆதரிப்பதால், தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் அவர் வெற்றி பெற்று விடலாம் என்று அபேதவாதிகள் கூறினார்கள். திரு. சீனிவாசஐயங்கார், தலைவர்காமராஜ் அவர்களை அணுகி, இதுபற்றி விளக்கமாகப் பேசினார். ஐயங்கார் சொல்கிறபடி காமராஜ் கேட்பார் என்றும், அவர் எண்ணினார். காந்தி எதிர்ப்புக்கு எனது ஆதரவா? 'நீங்கள்கூறுவது உண்மைதான்! நாங்களும் அபேதவாதிகளும் கூடி உங்களுக்கு வாக்களித்தால், வெற்றி பெற்றுத் தலைவராகி விடுவீர்கள் என்பதும் உண்மைதான். ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் நீங்கள் வந்து செய்யப்போகும் பணி என்ன?' என்று ஐயங்காரைக் காமராஜ் கேட்டார் காங்கிரஸ் கட்சிக்குள் வந்து, நான் காந்தியை எதிர்ப்பேன்' என்ற பதிலை ஐயங்கார்கூறினார்! 'அப்படியா? காந்தியை எதிர்க்கவா நான் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்? காந்தியை எதிர்ப்பதும் - எதிர்த்து வெற்றி பெறுவதும் இந்தக் காமராஜ் இருக்கும் வரை நடக்காது! அது எனக்குப் பிடிக்காத ஒன்று! காந்தியடிகளை எதிர்ப்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இன்று தங்களுக்கு நான் வெற்றியைத் தேடித் தந்திடலாம், ஆனால், அத்தோடு என் வாழ்க்கையும் அஸ்தமித்துவிடும்' என்றார் காமராஜ்.