பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 : ് а 8 § (25 கோடு தாழ்ந்தது குன்றம் உயர்ந்தது! 'அப்படியா நான்தலைவர்தேர்தலுக்கு நிற்கமாட்டேன்' என்று கூறிவிட்டு விர்ரென்று சீனிவாச ஐயங்கார் விரைந்தார் மறுபடியும் காமராஜரை எதற்கும் வற்புறுத்தாமல் அவர் இருந்து விட்டார். தொண்டு என்றால், ஓர் இலட்சியம் வெற்றிபெற, அதன்அருமை பெருமைகளுக்கேற்ப வளைந்து கொடுத்துப் பணியாற்றுவதுதான்! அதற்கேற்பக் காந்தியடிகளுக்கு நல்ல தொண்டராக விளங்கியவர் காமராஜ்! அது போலவே கடைசி வரை காமராஜருக்கும் நல்ல தொண்டர்களாகவே காங்கிரஸ்காரர்கள் திரண்டு நின்று பணியாற்றி யதை நாடு அறியும் மக்களும் உணர்வார்கள் அல்லவா? ஆகஸ்டுப் புரட்சியால் அனைவரும் விடுதலை? ஆகஸ்டு புரட்சியால் 1942-ஆம் ஆண்டு சிறை சென்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் - தொண்டர்களும் 1945-ஆண்டின் போது, ஒருவர் பின் ஒருவராக விடுதலையாகிக் கொண்டே வந்தார்கள்! இந்தியாவில், அப்போது வைசியராயாகப் பணியாற்றிய லார்டு வேவல், எல்லாத் தலைவர்களையும், அழைத்துச் சமாதானம் செய்தார். அபேதவாதர் இராஜாஜி! முன்னாள் பிரதமர் என்ற முறையில், இராஜாஜி அவர்களையும் அழைத்துப் பேசினார் லார்டு வேவல்! இந்த நேரத்தில் ராஜாஜி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர முயற்சித்தார். அப்போது அபேதவாதம் பேசிய இராஜாஜிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. சுபாஷ் ஓட்டைப் படகு இராஜாஜி எதிர்ப்பு! சுபாஷ் சந்திரபோஸ் 1939-ஆம் ஆண்டு, திரிபுரா காங்கிரஸ் பேரவையில் நடைபெற்ற தேர்தலில் வாகை சூடினார்: காந்தியடிகளின் முழு ஆதரவும் பெற்ற பட்டாபி சீதாராமையா தோற்றார்: