பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 199 அதனால், பட்டாபி தோல்வி எனது தோல்வி என்று கூறுமளவிற்குக்காந்தியடிகளுக்கும் சுபாஷ் பாபுவுக்கும் கொள்கை வடிவமான கருத்து வேறுபாடு தோன்றியது! அதில் போஸ் வெற்றி பெற்றார்: - காந்தியடிகளின் மகனுக்கு தனது மகளை மணம் செய்து கொடுத்துச் சம்பந்தியாகி விட்ட ராஜாஜி, காந்தியடிகளின் கருத்து வேறுபாடுகளுக்கு வழக்குரைஞரானார்: சுபாஷ் போஸ் கட்சி ஒர்ஒட்டைப்படகு என்று தரக்குறைவாகப் பேசி: இராஜாஜி செய்த சுபாஷ் பாபு எதிர்ப்புப் பிரசாரத்தை எஸ். சத்தியமூர்த்தி, பசும் பொன் முத்துராமலிங்க தேவர், முத்துரங்க முதலியார் போன்ற தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். தலைவர் காமராஜ் அவர்களும், சுபாஷ் பாபு பிரச்னை கட்சிப் பிரச்னை. அதைப் பகிரங்கமாக எதிர்ப்பது தவறு என்று ராஜாஜிக்கு எதிராக நின்றார்: 1942-ஆம் ஆண்டு, அலகாபாத் நகரில், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடைபெற்ற போது, பாகிஸ்தானைப் பற்றி இராஜாஜி ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்; அவருடைய தீர்மானத்திற்கு ஆதராவக 15 வாக்குகளும், எதிர்த்து 120 வாக்குகளும் கிடைத்தன: உடனே இராஜாஜி, அகி ல இந்திய காங்கிரஸ் கட்சியிலே இருந்தும், காங்கிரஸ் செயற்குழுவிலே இருந்தும் விலகிக் கொண்டார். 'எனது தீர்மானம் தோற்றாலும் தனது போராட்டம் தொடர்ந்து நீடிக்கும்" என்றார் தனித்தே அவர் நின்றார்: காங்கிரஸிலிருந்து விலகு காந்தியடிகள் கடிதம்! காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக இராஜாஜி நடந்து கொண்டதால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று,தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அவருக்கு நோட்டீஸ் கொடுத்தது. காந்தியடிகள், ஜூலை 15ஆம் நாள் இராஜாஜிக்கு ஒரு கடிதம் எழுதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவியையும், சட்டசபை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்யுமாறு கூறினார்: . அதற்கேற்ப இராஜாஜி அவ்விரண்டு பதவியிலிருந்தும் விலகிக் கொண்டார். அத்தோடு ஆகஸ்டுப் புரட்சியையும் தனித்து நின்றே எதிர்த்தார்: