பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2GO தேசியத் தலைவர் காமராஜர் காங்கிரஸ் கட்சி அரசியலில் இவ்வளவு விருப்பு வெறுப்புகள் காந்தியடிகளுக்கும் - ராஜாஜிக்கும் விளைந்த பிறகும் கூட, இராஜாஜி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேரவிரும்பினார் வைசியராய் லார்டு வேவலுடன் சமாதானம் பேசிட முயன்றதும் ஆகஸ்டுப் புரட்சியிலே போராடிச் சிறையிலே உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் ஒரு பெரிய அதிருப்தியையே அளித்தது. மாணவரணி மாநாடு ராஜாஜிக்கு எதிர்ப்பு: மதுரையில் அப்போது காங்கிரஸ் மாணவர்கள் மாநாடொன்று நடந்தது. அந்த மாநாட்டில் காங்கிரசில் ராஜாஜியைச் சேர்க்கக் கூடாது என்ற ஒரு கிளர்ச்சி மேலோங்கி நின்ற நேரம்! மாணவர்களும், இவ்வாறு ராஜாஜியின் முன்னுக்குப் பின் முரணான சம்பவங்களை எதிர்த்துக் கொண்டே இருந்தார்கள். திடீரென்று ஒரு செய்தி வந்தது என்ன தெரியுமா அது ? திருச்செங்கோட்டிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி உறுப்பினராக ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதே அந்த திடீர்ச் செய்தி! - குன்றம் உயர்ந்தது! கோடு தாழ்ந்தது! உடனே காமராஜ் அவர்கள், ஒர் எதிர் அறிக்கைவிடுத்து, 'தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாமல் திருச்செங்கோட்டில் எப்போது தேர்தல் நடந்தது? எப்படித் தேர்தல் நடந்தது? காங்கிரஸ் கட்சியிலே விலகிய இராஜாஜி, மீண்டும் காங்கிரசிலே சேர்ந்தது எப்போது? எப்படி?” என்ற வினாக்கள் மேல் வினாக்களை அவர் தொடுத்தார்: இந்தக் குழப்பத்தைத் தெளிவுபடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தை 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதியன்று.மதுரையில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. ஆகஸ்டுப்போராட்டத்திற்குப்பிறகு நடைபெறும் முதல் கட்சிக் கூட்டம் இது. நாடாளுமன்றக் குழுவையும் இந்தக் கூட்டம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்! அதனைப் போலவே, சட்டமன்றத்திற்குப் போட்டியிடும் வேட்பாளர்களையும், இதே நாடாளுமன்றத் தேர்வுக் குழுதான் தேர்வு செய்ய வேண்டும்.