பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 201 தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எல்லாப் பணிகளையும் ஏற்று நடத்தும் பொறுப்புக்கு, ராஜாஜியை அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எண்பது பேர் கூடிக் கையெழுத்திட்டு, ஒரு தீர்மானத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு அனுப்பியது ராஜாஜி அணி இராஜாஜி அணியின், அத்துமீறிய செயல் இது எனக் கருதிய காங்கிரஸ் எதிரணியினருக்கு எரிச்சலை எழுப்பியது அதனால், கடுமையான கண்டனமும் - குழப்பமும் மூண்டன. மதுரை சிதம்பர பாரதி, தென்மதுரையை விழுங்கிய கடலூழிபோல், 'தமிழ்நாட்டில் ராஜாஜிக்கு எதிராக உள்ள அணியின் பலத்தையும் - எதிர்ப்புக் கருத்தையும் எதிரொலித்தே தீருவேன்' என்று பொங்கி எழுந்தார்: அதன் அறை கூவலாக, மதுரை நகரருகே உள்ள திருப்பரங் குன்றத்தில், அக்டோபர் 30-ஆம் நாளன்று - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக் கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள் மாநாடு ஒன்றைக் கூட்ட, சிதம்பர பாரதி சகல ஏற்பாடுகளையும் செய்தார். ஆகஸ்டுப் புரட்சிக்குப் பின்தமிழ்நாட்டில் கூடிய முதல் மாநாடு இது. தொண்டர்கள் ஆயிரமாயிரவர் அணி வகுக்கவும், அவர்கட் கான வசதிகளைச் செய்து தரவும் சிதம்பர பாரதி முன்நின்றார். திருப்பரங்குன்றத்தில் 30-ஆம் நாளன்றே தலைவர்களும் - தொண்டர்களும் திரண்டார்கள் அவரவர்களுக்கான எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன-சிதம்பரபாரதி அவர்களால்! இராஜாஜி - மதுரையிலே வந்து தங்கினார் திருப்பரங்குன்றம் மாநாடு எப்படி அமைந்துள்ளது? யார் யாருக்கு பலம் இருக்கிறது 2 யார் யார் வருகை தந்துள்ளார்கள் என்ற விவரங்களை எல்லாம், தனது ஆட்கள் மூலமாகவும் - மாநாட்டைப் பார்க்க வந்தள்ளவர் களிடமும் விசாரித்துத் தெரிந்து கொண்டார்: மாநாட்டின் தொண்டர் பலம் - கொள்கை பலம் செல்வாக்குப் பலம் எல்லாம் தனக்குச் சாதகமான நிலைமையில் இருக்காது என்பதைப் புரிந்து கொண்டார் இராஜாஜி அதனால், காமராஜ் அவர்களையே நேரில் சென்று காணலாம் என்ற எண்ணம் கொண்டார்! திருப்பரங்குன்றம் மாநாட்டிற்கு வரலாமா? என்று காமராஜைச் சந்தித்துக் கேட்டார் இராஜாஜி! -