பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தேசியத் தலைவர் காமராஜர் 'மாநாட்டிற்கு வருவதற்கு என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? தாராளமாக வரலாமே!’ எதிர்க் கேள்வி கேட்டார் - அவருக்கு வரவேற்பும் தந்தார்காமராஜ். 'நீங்கள் என்னை அழைத்தால் நான் மாநாட்டிற்கு வருகிறேன்" என்று கூறினார்.இராஜாஜி! ஏனென்றால், காமராஜ் அழைத்துத்தான், இராஜாஜி திருப்பரங்குன்றம் மாநாட்டிற்குப் போனார் என்று மக்களும் - காங்கிரஸ் தொண்டர்களும் கருதவேண்டும் என்ற பெயரை உருவாக்கிடவே, இராஜாஜி அவ்வாறு காமராஜ் அவர்களைக் கேட்டார்: இராஜாஜியின் மர்மத்திற்கு காமராஜ் இடம் கொடுக்கவில்லை! அதை அறிந்த இராஜாஜி, இது எதுவும் சரிப்பட்டு வராது என்று எண்ணிய அன்றே குற்றாலம் போய்விட்டார்: பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர், மாநாட்டின் கொடியை ஏற்றியதும், கோலாகலமாக மாநாடு மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமானது. காங்கிரஸ் கட்சிக்குள்ளே இராஜாஜி அணி காந்தியடிகளை எதிர்ப்பதும், சுபாஷ் பாபுவைத் தரக்குறைவாகப் பேசுவதும், சத்தியமூர்த்தி அணியை மண் கவ்வ வைப்பதும் அந்த அணியின் அரசியல் கலைகளாகத் திகழ்ந்தன. காங்கிரஸில் மீண்டும் சேர்ந்திடுவதும், தலைமையைக் கைப்பற்றிட குழு கூட்டுவதும், அரசியல் கட்சி மாயாஜாலத் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொண்டிருப்பதுமான ராஜாஜி அணிப் பணிகளை, காங்கிரஸ் முன்னோடிகளான முத்துரங்க முதலியாரைப் போன்ற மூத்தவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். மட்டப்பாறை வெங்கட்ராமைய்யர், மதுரைவைத்தியநாதய்யர் போன்றவர்கள், மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களிலே இருந்து அடியாட்களை அழைத்து வந்து இராஜாஜி அணிக்கு அரணாக அமைந்திருந்தார்கள் இராஜாஜியை மூத்த காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்பது அப்போதைய இளைய தலைமுறையாக வளர்ந்து கொண்டிருந்த காமராஜ் அணிக்குப் பலமாகத் திகழ்ந்தது! அதனால், மீஞ்சூர் பக்தவத்சலத்தின் மாமனாரான சி.என்.முத்துரங்க முதலியாரிடம் கூறி, காமராஜ் பெயரை முன் மொழிய ஏற்பாடுகள் நடந்தன!