பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 203 என்ன காரணத்தாலோ முதலியார் காமராஜ் பெயரை முன்மொழியத் தயக்கமாக நின்றார் காரணம், அடியாட்கள் ஆர்ப்பாட்டம், காந்தியடிகள் செல்வாக்கு, பணபலங்கள் இவற்றை எதிர்க்கவே தயங்கினார். இந்தச் செய்தி, பசும் பொன் தேவர் முத்துராமலிங்கம் அவர்களுக்கும் எப்படியோஎட்டியது எலியென எண்ணியவரைப் புலியாக்கிடப் புறப்பட்டார்! எஸ். சத்தியமூர்த்தி, முத்துரங்க முதலியார், பசும்பொன் தேவர் திருமகன், கே. எம். வல்லத்தரசு, போன்றவர்களை எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட கேட்டும் அவர்கள் மறுத்து விட்டார்கள். அதற்குப் பிறகுதான், வளர்ந்துவரும் இளைய தலைமையின் வாரீசாகத் திகழ்ந்திடக் காமராஜ் அவர்களைப் போட்டியிட முடிவு செய்தார்கள்-காங்கிரஸ்காரர்கள் காமராஜ் பெயரை முன்மொழியத் தயங்கியவர்களை எதிர்த்து, பசும்பொன் தேவர் அவர்கள் முன் மொழிந்தார்! அடியாட்களைத் திரளாகக் கொண்டு வந்த மட்டப்பாரை வெங்கட்ராமய்யர், மதுரை வைத்திய நாதய்யர் அனைவரையும் இலைமறை காயாக எச்சரித்தனர்: அதற்குப் பிறகு, மாநாட்டை சி.என். முத்துரங்க முதலியார் துவக்கி வைத்தார் கல்லிடைக்குறிச்சியக்ஞேஸ்வரசர்மாதலைமை வகித்தார் 'தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை ராஜாஜிக்குக் கொடுக்கக்கூடாது' என்ற தீர்மானம் பலத்த ஆரவாரக் கையொலிகளுக்கு இடையே நிறைவேறியது. இராஜாஜி அணியினர் எண்பது பேர் கையெழுத்திட்டு அனுப்பிய தீர்மானம் என்ன ஆயிற்று? அதன் கதி என்ன? என்று அந்த அணியினைச் சேர்ந்தவர்கள் பரபரப்புடன் கேட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக் கூட்டம் மறுநாள் மாலை கூடுவதற்கு முன்பு சிலர் சமாதானப் பேச்சிலே ஈடுபட்டனர்! ஆனாலும், அந்தக் கட்சிக் கூட்டத்தில் தங்களது அணிக்கு பெரும்பான்மை பலம் இல்லையென இராஜாஜி கூட்டத்தினர் உணர்ந்தார்கள்! மாநாட்டுக் கூட்டம் ஆரம்பமானது காமராஜ் பேசியபோது, 'காங்கிரஸ் கட்சியினுடையதீர்மானங்களை இராஜாஜி ஏற்று நடப்பதாக இருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு அவர் வருவதைப் பற்றி எதிர்ப்பு ஏதுமில்லை அதற்கு எதிராக நான் கூறுவதற்கு ஏதுமில்லை. கூட்டம் ஆரம்பத்திலேயே இதைச் சொல்கிறேன். ஆகவே, உங்களுடைய தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும்' என்று குறிப்பிட்டார்.