பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204. தேசியத்தலைவர் காமராஜர் உடனே, இராஜாஜி அணியினர் கொடுத்திருந்த தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். திருச்செங்கோட்டில் இராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்என்ற தேர்தல் செல்லத்தக்கது அல்ல என்ற தீர்மானமும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தது. இது காங்கிரஸ் செயற்குழுவின் தீர்மானமாகும். இதற்கு இராஜாஜி அணியினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்: அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் மெளலான அபுல் கலாம் ஆசாத், அப்போது வெளியிட் டிருந்த அறிக்கையைச்சுட்டிக்காட்டி, இராஜாஜி அணியினர்தங்கள் கட்சிக்குப் பலம் சேர்க்கப் பார்த்தனர்: ஆகஸ்டு 12-ஆம் நாள் தம்மைக் காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஆசாத் அவர்களுக்கு இராஜாஜி கடிதம் எழுதினாராம்! அதை அவர் ஒப்புக் கொண்டு அக்டோபர் முதல் நாள் ஒர் அறிக்கை வெளியிட்டாராம்! அந்த அறிக்கையைச் சான்று காட்டியே இராஜாஜி அணியினர் செயற்குழுத் தீர்மானத்தை எதிர்க்க முன்வந்திருக்கின்றனராம்! இந்த எதிர்ப்பைக் கண்டமீஞ்சூர் எம். பக்தவச்சலம், 'இராஜாஜி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டதாகவே கருதினாலும், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கட்சியில் இருந்தவர்கள்தான் தேர்தலுக்கு நிற்கமுடியும்' என்று காங்கிரஸ் கட்சி விதி கூறுகிறது' என்று அவர் சுடடிக் காட்டினார். உடனே சி. என். முத்துரங்க முதலியார் எழுந்து, 'தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கட்சிக்கு 37இடங்களுக்குத் தேர்தல் நடைபெறவில்லை. அவ்வாறிருக்க, திருச்செங்கோடுக்கு மட்டும், அதுவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவருக்கே தெரியாமல் எவ்வாறு தேர்தல் நடத்திட முடியும்?' என்று கேட்டார்! இதற்குப் பிறகு, திருச்செங்கோடு தேர்தல் செல்லாது என்று காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. அதனால், கோடு தாழ்ந்தது; குன்றம் உயர்ந்து விட்டது அல்லவா? சட்டமன்றத் தேர்தலுக்குரிய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் குழுவை நியமிக்கும் அதிகாரத்தைக் காங்கிரஸ் செயற்குழுவிற்குக் கொடுத்து ஒரு தீர்மானம் நிறைவேறியது. அந்த ஆண்டு, கல்கத்தாவில்அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடியது. அதற்கு ஒருதுதுக்குழு அனுப்ப வேண்டும் என்ற முடிவை இராஜாஜி அணியினர் முடிவெடுத்தனர். இந்த முடிவை, சீர்காழியில் நடந்த ரகசியக் கூட்டத்தில் அவர்கள் எடுத்தார்கள். இராஜாஜி அணியினர் சீர்காழி நகரில் திட்டமிட்டபடியே கல்கத்தா சென்றார்கள் தமிழ்நாட்டில் காமராஜ் குழு, இராஜாஜி