பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 205 அணி என்று இரு பிரிவினர்கள் காங்கிரஸ் கட்சிப் பணியாற்று கிறார்கள். அதனால், தேர்தலுக்கான வேட்பாளர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவிடம் கொடுக்கக்கூடாது என்ற தங்களது எதிர்ப்பைக் கல்கத்தாவிலே அவர்கள் எதிரொலித்தார்கள்! மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பை அளித்தால், தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெறாது என்றும் கூறினார்கள். தமிழ் நாட்டிற்குரிய வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பை, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியே ஏற்க வேண்டும் என்ற கருத்தை, இராஜாஜி அணியினர் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மெளலான அபுல்கலாம் ஆசாத்திடம் நேரிலேயே தெரிவித்தார்கள்! அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த அருணா ஆசப் அலியிடம், சென்னைக்கு வந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலே உள்ள குழப்பங்களை விசாரணை நடத்தும்படி அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு, கேட்டுக் கொண்டது. சென்னை வந்த அருணா ஆசப் அலி, "திருச்செங்கோடு தேர்தல் செல்லுமா? செல்லாதா? என்று தீர்மானிக்கத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக் குழுவிற்கு அதிகாரம் இல்லை' என்றார்! தேர்தல் டிரிபியூனல் தான் அதை ஆய்வு புரிய அதிகாரம் உண்டு' என்றும் அவர் தெரிவித்தார்: திருச்செங்கோட்டில் தேர்தல் என்ற ஒன்றே நடைபெறவில்லை. தேர்தல் நடத்தவேண்டியதமிழ்நாடு காங்கிரஸ்கட்சி, டிரிபியூனலுக்கு மேல் முறையிடு செய்யும் சூழ்நிலை தோன்றியதைப் பற்றி காமராஜ் அவர்கள் கவலைப்படாமல், தேர்தல் டிரிபியூனலைத் தாமே நியமிக்கப் போவதாக அவர் அறிவித்தார்: அருணா ஆசப் அலி சென்னையிலே விசாரணையை முடித்துவிட்டு, பம்பாய் நகரிலுள்ள சர்தார் வல்லபாய் படேலிடம் நேராகச் சென்று, நடந்த விவரங்களை எல்லாம் விளக்கினார்! தமிழ்நாட்டின் விசாரணை விவரங்களை, அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மெளலானா ஆசப் அலியிடம் கொடுக்கப் போவதாகக் கூறினார். இதற்கிடையில் ராஜாஜியைச் சந்தித்துச் சமாதானம் செய்து கொள்ள இயலுமா என்றும் கேட்டு, ஒரு தந்தியைக் காமராஜ் அவர்களுக்குக் கொடுத்தார்.அவர் பம்பாயிலிருந்த சர்தார் வல்லபாய் படேலிடம், காமராஜ்