பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 தேசியத் தலைவர் காமராஜர் தூதுக்குழு சென்று அருணா ஆசப் அலி நடத்திய விசாரணை விவரங்களை விளக்கியது காமராஜ் - ராஜாஜியிடமும் படேல் தொடர்பு கொண்டு சமரசத்திற்கு வழிகோலினார்: அதன் எதிரொலியாக, இராஜாஜி, காமராஜ் அவர்களிடம் பேசினார். தமிழ்நாடு ஆட்சி மன்றக் குழுவிடம் எட்டுப் பேர்கள் இருக்க வேண்டும் என்றும், தலைவர்-துணைத் தலைவர்கள்போக, மிகுதியுள்ள ஆறு பேர்களில் ராஜாஜி அணியினர் மூவரும் தமது அணியினர் மூவரும் இடம் பெறலாமென்றும் திரு காமராஜ் சர்தார் படேலிடம் கருத்துத் தெரிவித்ததை இராஜாஜி ஒப்புக் கொண்டார்! காமராஜ் முதலில் தெரிவித்த கருத்தும்இது தான்! அப்போது அதை ஏற்றுக்கொள்ளாமல் இராஜாஜி கல்கத்தாவிற்கு துதுக்குழு ஒன்றை அனுப்பி, புகாரும் புரிந்து, தமிழ்நாட்டு அரசியல் நிலைமையை வளரவிட்டு, இறுதியில் திரு காமராஜ் கூறியதையே இராஜாஜியும் ஏற்றுக்கொள்ளச்சம்மதித்தார்: இந்த இரு அணியின் முடிவைத்தலைமைப்பார்லிமெண்ட்குழு சார்பாகச் சர்தார் படேலும் ஏற்றுக் கொண்டார். உடனே ஆசப் அலிக்குப் படேல், தாம் ஒப்புக் கொண்ட முடிவைத் தெரிவித்தார்: இரண்டு அணியினரின் தகராறுகளுக்குத் தமிழ்நாட்டில் முடிவேற்பட்டது. இரு அணிகளும் ஒப்புக்கொண்ட எட்டுபேர்கொண்டதமிழ்நாடு ஆட்சிமன்றக் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் இராஜாஜி இடம்பெறவில்லை! தலைவர்காமராஜ், ருக்மிணி இலட்சுமிபதி, சி.என். முத்துரங்க முதலியார், ஒமந்துர் ராமசாமி ரெட்டியார், அவிநாசிலிங்கம் செட்டியார் ஆகிய இந்த ஐந்து பேர்கள் ஒரே அணியாக இயங்கினர்: கோவை சி.பி. சுப்பையா, முனிசாமி பிள்ளை, அண்ணாமலைப் பிள்ளை ஆகியவர்கள் இராஜாஜி அணியினராகவும் அக்குழுவில் இடம்பெற்றார்கள். விசாரணைக்கு முன்பு என்ன எண்ணினாரோ அந்த முடிவின்படியே அந்த எட்டுப்பேர்குழுஅமைப்புப் பணியும் முடிவு பெற்றது. தமிழ்நாட்டில் ராஜாஜிக்கும் - காமராஜ் அவர்களுக்கும் நடந்த கட்சி அரசியல் பலப் பரீட்சையில், காமராஜ் அணியே வெற்றி பெற்றது. காரணம், அவருக்கு இருந்த தொண்டர் படைகளின் அசைக்க முடியாத பலம், கட்சிக் கட்டுக்கோப்புத்தான் என்றால் - அது மிகையாகாது!