பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ6) காந்தி - காமராஜர் "கிளிக் போராட்டம்! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றிய தலைவர் காமராஜ் அவர்கள், 1946-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் மகாத்மா காந்தியடிகள், தமிழ்நாடு சுற்றுப்பயணம் வருகிறார் என்பதை அறிந்து அற்கான ஏற்பாடுகளைச்செய்து கொண்டிருந்தார்: காந்தியடிகளின் இந்தப் பயணம்தான், தமிழ்நாட்டின் இறுதிச் சுற்றுப் பயணமாக இருந்தது! அதனால்தானோ என்னவோ இந்த முறை அவர், மதுரை மீனாட்சியம்மன் கோவில், பழநி முருகன் கோவில் போன்ற சில ஆலயங்களுக்குச் சென்று, இறைவனைத் தரிசனம் செய்தார்: சென்னையிலே உள்ள இந்திப் பிரசாரசபை ஆண்டு விழாவிற்கு, அடிகள்தலைமை தாங்கி நடத்திட, கல்கத்தாநகரிலே இருந்து அவர் சென்னை மாநகரம் வருகைதந்தார்: ஜனவரி 21ஆம் நாள், சென்னை நகர் வரும் அண்ணல், அவர் வரும்தனி ரயில் எங்கே நிற்கப் போகிறது, எங்கேதங்கப் போகிறார், எங்கே வரவேற்பு விழா நடக்கப் போகிறது, யார் யார் அந்த விழாவிலே அடிகளை வரவேற்கப் போகிறார்கள் என்ற விவரங்களெல்லாம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற உரிமை யிருந்தும், தெரிவிக்கப்படாமல் இரகசியமாகவே வைக்கப் பட்டிருந்தது! காந்தியடிகள் உடல்நிலையும் அப்போது நலமாக இல்லை. எங்கே அவர் இறங்குகிறார்? வரவேற்பு விழா எங்கே? என்பதெல்லாம் மக்களுக்குத் தெரிந்தால், கூட்டத்தை சமாளிக்க முடியாது போய்விடும் என்பதால், காவல் துறையினரும் இரகசியமாக வைத்திருந்தார்கள்! இரயிலிலிருந்து காந்தியடிகள் இறங்கி, அவர் எங்கு தங்குகிறாரோ அந்த இடம்வரைப் பொறுப்பாகக் கொண்டுபோய் சேர்க்கும் பணிகாவல்துறையினுடையது.