பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O3 தேசியத் தலைவர் காமராஜர் இரயிலை எங்கே நிறுத்த வேண்டும்? எந்த இடத்தில் அவர் இறங்க வேண்டும்? எப்படிப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்ற திட்டங்கள் எல்லாம் காவல்துறையினருக்கும் தெரியும். ஆனால், அவர்களும்தமிழ்நாடு காங்கிரஸ்கட்சித்தலைவர்களுக்குத் தெரிவிக்கவில்லை! காவல் துறையிலே பணியாற்றிடும் ஓர் உயர்தர அதிகாரி, காந்தியடிகளை வரவேற்க யார்யார்வருகிறார்கள்? நடக்கப்போகும் நிகழ்ச்சிகள்என்னென்ன? என்பதை அறிந்திட, இந்திப்பிரசாரசபை அருகே காந்தியடிகள் தங்கிட இடவசதி செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார்: பத்திரிக்கை நிருபர்கள், எங்கே காந்தியடிகள் இறங்குகிறார்? எங்கே தங்குகிறார்? எப்போது புறப்படுகிறார்? என்னென்ன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்? என்ற விவரங்கள் எல்லாம் இராஜாஜிக்கும் தெரியும். அவர், காமராஜ் அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும் விவரங்களைக்கூறாமல், மர்மமாக மறைத்து வைத்திருந்தார். அதன் காரணம் அவருக்கும் அவரது அணியினருக்கும் மட்டும் தெரிந்த ஒன்றாக இருந்தது! அன்று மாலை, காவல்துறை அதிகாரி ஒருவர், காந்தியடிகளை இரயில் நிலையத்திலே வரவேற்க இருந்த தலைவர்களை மட்டுமே அழைத்தார்: இராஜாஜி அந்த அதிகாரியுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அப்போதும், அவர் காமராஜருக்குத் தெரியப்படுத்த வில்லை! என். கோபாலசாமி ஐயங்கார், இந்தி பிரச்சார சபை செயலாளர் சத்தியநாராயணா அவர்களுடன் இராஜாஜி புறப்பட்டுக் காந்தியடிகளை வரவேற்றிடச் சென்று விட்டார். காமராஜ் அவர்கள் இந்திப் பிரச்சாரச் சபாவிற்கு வந்தார்! விவரங்களை அறிந்தார்! திடுக்கிட்டுத் திணறி நின்றார்! காந்தியடிகளை வரவேற்கச் சிலருடன் இராஜாஜி சென்றுள்ளார் என்பதையும் உணர்ந்தார்: காந்தியடிகள் வருகின்ற தனி ரயில் எந்த ரயில் நிலையத்தில் நிற்கும்; எவ்வாறு அதை அறிவது என்று எண்ணிய காமராஜர் தவியாய் தவித்து நின்றார்: சென்னை அருகே உள்ள அம்பத்தூர் ரயில் நிலையத்திலேஅவர் இறங்குகிறார். அங்குதான் அவருக்கு வரவேற்புத் தருகிறார் இராஜாஜி, வாருங்கள் போகலாம் என்று அப்போது அங்கு வந்த