பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 209 பத்திரிகை நிருபரான கணபதி என்பவர் கூறி காமராஜ் அவர்களை அழைத்ததும், அவருக்கு அளப்பரிய மகிழ்ச்சி ஏற்பட்டது! அம்பத்துர் ரயில்வே நிலையத்திலே காந்தியடிகள் வந்த தனிரயில் வந்து நிற்பதற்கு முன்பே காமராஜ் அவர்கள் சென்றடைந்தார்: அங்கே, மலர் மாலைகளுடன் இராஜாஜியும், கோபால சாமி ஐயங்காரும், சத்திய நாராயணாவும் மற்ற முக்கிய இராஜாஜி அணி காங்கிரஸ்காரர்களும், பிற காவல்துறையினரும் நின்றிருந்தார்கள்! ஒரு புன்னகைப் பூத்த முகத்துடன் காமராஜ் அவர்கள் மாலையுடன் இராஜாஜியைப் பார்த்தார்! அப்போதே அவர் முகத்திலே சில ரேகைகள் பளிச்சிட்டன: காந்தியடிகள் வருகைதந்த தனி ரயில் அம்பத்தூர்நிலையத்திலே வந்து நின்றது. இறங்கிவந்தார் அடிகள் தமிழ்நாடுகாங்கிரஸ் தலைவரான காமராஜ், அண்ணலுக்கு மலர் மாலையைச் சூட்டி மகிழ்ந்தார்: மலர்மாலை ஏற்ற அடிகள், சிரித்துக் கொண்டே காமராஜர் தோளைத் தட்டிக் கைகூப்பி வணங்கி அவரை வரவேற்றார். பிறகு, இராஜாஜி அணியினரும் காந்தியடிகளுக்கு மலர்மாலையைச் சூட்டினார்கள். சாதாரணமாக ஒருவரை அறிமுகப்படுத்தும் பழக்க விதிகளின் படி கூட, அப்போது இராஜாஜி காமராஜரைக் காந்தியடிகளுக்கு அறிமுகப்படுத்தவில்லை! ஏன், இராஜாஜி அவ்வாறு அறிமுகப்படுத்தவில்லை? என்ன காரணம்? ஏதாவது அடிப்படையாக இருக்க வேண்டாமா? அவை இவை; காமராஜ் அவர்கள், எஸ். சத்தியமூர்த்தி ஐயர் அணியைச் சேர்ந்தவர் அவரை ஆசானாக ஏற்றுக் கொண்டு, காங்கிரஸ் கட்சிக்குரிய வளர்ச்சிப் பணிகளை ஆற்றியவர். எஸ். சத்தியமூர்த்தி 1935-ஆம் ஆண்டு தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளராக நின்ற ஆற்காடு சர். ஏ. இராமசாமி முதலியாரைத் தோற்கடித்தார்! சட்டசபைக் காங்கிரஸ் கட்சிச் செயலாளர் பொறுப்பை ஏற்று இராஜாஜி அரசியல் செல்வாக்கை மீறி நின்றவர்! அதற்காக, 1936-ஆம் ஆண்டில், காரைக்குடியில் நடைபெற்றத் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித் தேர்தலில், சி.என். முத்துரங்க முதலியார் அவர்களை நிற்க வைத்தார் ராஜாஜி. அவரைச் சத்தியமூர்த்தி தோற்கடித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.அவர்!