பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 தேசியத் தலைவர் காமராஜர் தனது அரசியல் மாணவரான காமராஜ் அவர்களைத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராக்கினார்சத்தியமூர்த்தி அதனாலும், அணிப்பகைகள்வளர்ந்தன: அன்றைய சென்னைமாநிலத்தில் 1937-ல் ஒரே ஒரு பட்டதாரித் தொகுதி இருந்தது; சத்தியமூர்த்தி அவர்கள் அத்தொகுதியிலே போட்டி போட எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்: அதே தொகுதியில்ராஜாஜி அவர்களும் போட்டியிடப்போவதாக திடீரென முடிவெடுத்தார். இந்து பத்திரிகை உரிமையாளர் சீனிவாசன் அவர்கள் சத்தியமூர்த்தியிடம் துது பேசினார். அதனால் சத்திய மூர்த்தி அவர்கள் இராஜாஜிக்கு அந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு போட்டியிடாமலேயே நின்று விட்டார் செங்கல்பட்டு தொகுதியிலே போட்டியிட எல்லா ஏற்பாடு களையும் செய்துவிட்ட எம். பக்தவத்சலம், தனது தொகுதியை சத்தியமூர்த்திக்கு விட்டுக் கொடுக்க முன் வந்தார். ஆனால் சத்தியமூர்த்தி அதை ஏற்க மறுத்துவிட்டார். இராஜாஜி அப்போது சத்தியமூர்த்தி அவர்களிடம் தனியாகச் சென்று,காங்கிரஸ் கட்சி தேர்தலில் வென்றுவிட்டால், மந்திரி சபையும் அமைக்குமானால், சத்தியமூர்த்தியையும் அந்த அமைச்சரவையிலே ஒருமந்திரியாக நியமிப்பதாக வாக்குறுதி தந்தார்: தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றது! இராஜாஜி பிரதமரானார். வி.வி.கிரி உட்பட 9 பேர்களை அமைச்சர்களாக நியமித்தார். சத்தியமூர்த்திக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி இராஜாஜி நடக்காமல், பட்டதாரி தொகுதியிலும் அவரை நிற்கவிடாமல், சத்திய மூர்த்தியை அவர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார் இதனால் அணிப் பகைகள் வளர்ந்தன! தனது அரசியல் ஆசானான சத்தியமூர்த்தியை, இராஜாஜி தந்திரமாக ஏமாற்றிவிட்டாரே என்று காமராஜ் மனவேதனைப் பட்டார். இந்த நம்பிக்கை மோசடிதான்,இராஜாஜி அணிக்கும், காமராஜ்அணிக்கும், அவர்கள்.இருவரும் சாகும்வரைவிஷ வித்தாக விளங்கியது! அதனாலும் அணிப்பகைகள் வளர்ந்தன: 1938-ஆம் ஆண்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவிக்கு சத்தியமூர்த்தி போட்டியிட்டார். சி.என். முத்துரங்க முதலியாரை எதிர்போட்டியாக நிறுத்திச் சத்தியமூர்த்தியைத் தோற்கடித்தார் இராஜாஜி.