பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 211 1939-ஆம் ஆண்டு, நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தேர்தலில் மீண்டும் சத்தியமூர்த்தி போட்டியிட்டார் ஒமந்தார் இராமசாமி ரெட்டியாரை எதிர்போட்டியாக நிற்கவைத்து, மீண்டும் சத்தியமூர்த்தியை இராஜாஜி தோற்கடித்தார். காமராஜ் அவர்களின் அரசியல் ஆசானான சத்தியமூர்த்தி, இராஜாஜியால் தோல்வி மேல் தோல்வி கண்டார். காங்கிரஸ் உட்கட்சிப் போக்கு காமராஜ் அவர்களுக்கு கனலாக மாறி கனன்று கொண்டே நெருப்பாக அனல் வீசியது: 1940-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் நடந்தது. உடனேசத்தியமூர்த்தி அரசியல்சாணக்கியராக நடமாடிடும் இராஜாஜிக்கு எதிராக பூரணய்யாவாக மாறினார்: தனது அரசியல் மாணவரான காமராஜரை அந்த தேர்தலிலே தலைமைப் பதவியிலே போட்டியிட வைத்தார்: இராஜாஜி, கோவை சுப்பையாவை எதிர்போட்டியாக நிறுத்தினார்: நூறு ஒட்டுக்கள் பெற்றுக் கோவை சி.பி. சுப்பையா தோற்றார்: நூற்றுமூன்று ஒட்டுக்கள் பெற்றுகாமராஜ் அவர்கள் வாகைசூடினார்: அவர் வெற்றி பெற்றதும், தனது குருவான சத்தியமூர்த்தியைத் தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராகக் காமராஜர் நியமித்துக் கொண்டார். சத்தியமூர்த்தியுடன் அடிக்கடி உட்கட்சி அரசியலில் மோதிக் கொண்டிருந்த இராஜாஜி, 1942-ம் ஆண்டில் நடைபெற்ற ஆகஸ்டு புரட்சியில், காந்தியடிகளுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளால் இராஜாஜி பங்கேற்கவில்லை! அலகாபாத் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில், பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்துத் தீர்மானம் கொண்டு வந்த ராஜாஜி, 15 ஒட்டுக்களைப் பெற்றுப் படுதோல்வி கண்டார்! பிரிவினை எதிர்ப்புத் தீர்மானம் 120 ஒட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றது! உடனே இராஜாஜியைப் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுமாறு சர்தார் வல்லபாய் படேல் மூலம் காந்தி வற்புறுத்தவே, அதற்கு முன்பே இப்படி நடக்கும் என்பதை யூகித்த இராஜாஜி விலகிக் கொண்டார்: இதற்கிடையே, சத்தியமூர்த்தி காங்கிரஸ் கட்சியால் எவ்விதப் பயனும் பெறாமல், 1943-ஆம் ஆண்டில் தரித்திரனாகவே காலமானார். அப்போது, காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் தடை செய்யப்பட்டிருந்தது. -