பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 தேசியத் தலைவர் காமராஜர் திருச்சி மாவட்ட அரியலூரில்,எஸ்.கே. பாட்டில் தலைமையில், சி.என். முத்துரங்க முதலியார் அவர்களால், தடை செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் சங்கம் என்ற அமைப்பாக மாறி, மாநாடு ஒன்றை நடத்தியது! அந்த மாநாட்டில், ஆகஸ்டுப் புரட்சியிலே பங்கேற்காதவர் களை, காங்கிரஸ் கட்சியிலே மீண்டும் சேர்க்கக் கூடாது என்ற தீர்மானம், 670 பேர் ஆதரவுடனும் நான்கு பேர் எதிர்ப்புடனும் நிறைவேறியது. இந்தத் தீர்மானம், தனக்காகவே நிறைவேற்றப் பட்டது என்பதை, இராஜாஜியும் அவருடைய அணியினரும் கருதினார்கள்: ஆனால், இந்த மாநாடு நடைபெறும்போது காமராஜ் அவர்கள் மத்திய பிரதேச மாநிலத்திலே உள்ள அலிபுரம் சிறையிலே மூன்றாண்டுகள்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்! சிறையிலே இருந்து வெளிவந்த தலைவர் காமராஜருக்கு, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் அளவுக்கு மீறிய செல்வாக்குப் பெருகி இருந்ததை அவர் கண்டார். காமராஜ் அவர்களின் அரசியல் ஆசானானசத்தியமூர்த்தி இறந்து போனதால், காமராஜ் அவர்களை எப்படியாவது இராஜாஜி அணியின் பக்கம் சேர்த்துக் கொள்ள, இராஜாஜி அணி பகீரதப் பிரயத்தனம் செய்தது. திருவண்ணாமலை என். அண்ணாமலைப் பிள்ளை, இல்லத்தில், காமராஜரையும் இராஜாஜியையும் காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க வைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காமராஜர் தயங்கியவாறே சென்றார். இராஜாஜி கருத்தை ஏற்காமல் நேராக தனது ஊரான விருது நகருக்குச்சென்று விட்டார்: மறுநாள் பத்திரிகையில் இராஜாஜியால் பரப்பப்பட்ட செய்தியைக் கண்டு காமராஜர் பரபரப்பு அடைந்தார்: அதுதான் திருச்செங்கோடு காங்கிரஸ் கட்சியிலே இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும் தெரியாமலேயே மாநிலக் காங்கிரஸ் கட்சி உறுப்பினராகத் இராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற பரபரப்புச் செய்தியாகும். - இவ்விதக் காரணங்களால், இராஜாஜிக்கும் காமராஜர் அவர்களுக்கும் உருவாகிவிட்ட உட்கட்சி அரசியல் பனிப்போர்தான் காந்தியடிகள் தமிழகம் சுற்றுப் பயணம் 1946-ஆம் ஆண்டில் மேற்கொண்ட போதும், தொடர்வரலாறாக உருவெடுத்தது.