பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 213 அக் காரணங்களின் தோற்றங்களே, காந்தியடிகள் தமிழ்நாடு வரும்போது உருவாக்கப்பட்ட எந்த நிகழ்ச்சிகளையும் இராஜாஜியால், காமராஜருக்குத் தெரிவிக்கப்படவில்லை! மர்மமாகவே அந் நிகழ்ச்சிகள் மறைக்கப்பட்டன: காந்தியடிகள் தனது சுற்றுப் பயணத்தின்போது, தமிழகத்திலே ஏழு நாட்கள் தங்கியிருந்தார். அப்போது அவர், பல பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தினார் ஏராளமான மக்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்: மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும், பழனி முருகன் கோவிலுக்கும் தரிசனம் செய்வதற்காக 2-2-1946-ஆம் நாள் சென்னைக்கு அருகே உள்ளகாட்டுப்பாக்கம் இரயில் நிலையத்திலே இருந்து தனி ரயிலில் காந்தியடிகள் புறப்பட்டார்: இராஜாஜி, தலைவர் காமராஜ் மற்றும் முக்கிய தலைவர்கள், பத்திரிகை நிருபர்களுடன் இரயில் புறப்பட்டது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், காந்தியடிகன் வருவதை அறிந்த பொதுமக்கள் அவரைப் பார்க்கத் திரண்டிருந்தார்கள்! அவர் இரயிலில் நின்றபடியே மக்களிடம் பேசிட, ஒலிபெருக்கி வசதிகளையும் செய்திருந்தார்கள். ரயில், முதன் முதலாக அச்சரப்பாக்கம் என்ற பேரூரில் நின்றது. மக்கள் கூட்டம் திரளாகத் திரண்டிருந்தது. பேசுவதற்காகக் காந்தியடிகள் ரயிலில் அமைக்கப்பட்ட மேடை மீதேறிய போது, இராஜாஜி ஒலிபெருக்கியைப் பிடித்துக் கொண்டார் - காந்தியண்ணல் பேசுகிறார்: "நான் மதுரை மீனாட்சிக் கோவிலுக்குச் செல்கிறேன் என்றால், அதற்குக் காரணம் இதோ நிற்கும் ராஜாஜிதான்.” 'எல்லோருக்கும் அந்தக் கோயிலை ராஜாஜி திறந்து விட்டிருக்கா விட்டால், நான் அங்கே செல்ல புறப்பட்டிருக்கமாட்டேன்’ என்று, காந்தியடிகள் தொடர்ந்து பேசும் போது குறிப்பிட்டார். காந்தியடிகள் பேசும்போது வாழ்க என்ற பேரொலிகளும் - கையொலிகளும் ஆரவாரங்களும் மக்கட் கூட்டம் எழுப்பியது. பின்னர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், லால்குடி, பூரீரங்கம், திருச்சி, சமயநல்லூர் வழியாக, காந்தியடிகள் சென்ற தனிரயில் மதுரை மாநகரை அடைந்தது.