பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 தேசியத் தலைவர் காமராஜர் 3.2.1946 அன்று மதுரையில் நடந்த மாபெரும் கூட்டத்தில் அண்ணல் கலந்து கொண்டார். மதுரை சொக்க நாதர் கோவிலில் அவர் வழிபாடு நடத்தினார் மாலை 5 மணிக்கு பழநிநகர் வந்து சேர்ந்தார் இரவு புறப்பட்ட அடிகள், அக்கரைப்பட்டி ரயில் நிலையத்திலே தங்கினார்: மறுநாள், 4.2.1946 அன்று திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், சீர்காழி, கடலூர், விழுப்புரம், திருமணி, செங்கற்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் அம்பத்தூரில் ரயில் நிலையம் வந்து வார்தா ஆசிரமத்திற்குப் புறப்பட்டார்: காந்தியடிகளிடம் ராஜாஜிக்குத் தனிப்பட்ட ஒரு செல்வாக்கு இருந்ததால், தலைவர் காமராஜர் அந்தப் பயணத்தின்போது, சற்று இதுங்கியேயிருந்து அவரோடு வந்தார்: பழநி ஆண்டவர் சந்நிதியில் கூட, இராஜாஜிக்கும் காந்தியடிகளுக்கும்தான் பரிவட்டம்கட்டி மரியாதை செய்தார்கள்egotill அறங்காவலதிகாரிகள்! காந்தியண்ணலும்-இராஜாஜியும் பழநிமலைப்படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கும்போது, காமராஜரும் அவர்கள் கூடவே சென்று கொண்டிருந்தார் அம்பத்தூரில், காந்தியடிகள் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது அறிமுகப்படுத்தாத தலைவர்காமராஜரை, மதுரை வரை சென்றும், பிறகு கூட்டங்களிலே கலந்துகொண்ட போதும் அறிமுகப்படுத்தாத காமராஜரை, பழநிமலைப் படிக்கட்டுகளிலே இருவரும் ஏறிக்கொண்டிருக்கும் போது, திடீரென நினைவு வந்ததாலோஎன்னவோ, ராஜாஜி அவர்கள், "இவர்தான்காமராஜர், காங்கிரஸ் பிரசிடெண்ட்" என்று அறிமுகப்படுத்தினார்: அதற்குப் பிறகு காந்தியடிகள் அம்பத்தூர் ரயில் நிலையம் வந்தார் நேராக வார்தாபுறப்பட்டுச் சென்றார்: காந்தியடிகள் சுற்றுப் பயணம் செய்த கோலாகல நிகழ்ச்சியைப் பற்றி "தமிழ் நாட்டில் காந்தி என்ற நூலாசிரியர் அ. இராமசாமி அவர்கள் 937-ஆம் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதை அப்படியே வெளியிடுகிறோம், படித்துப் பாருங்கள்! 'இம்முறை காந்தி தமிழகத்திற்கு வந்தபோது தமிழகத்தில் இராஜாஜி எதிர்ப்பு இயக்கம் கடுமையாக இருந்தது! இதன் எதிரொலியாக எழுந்த ஐயப்பாடுகளும், வாக்குவாதங்களும் பல!