பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/24

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(2) மகிழ்ச்சிக் கடலில் மாநகர் சென்னை மாநகர் சென்னை பூமியை நனைக்கும் பூ மழையாகத், தலைவர் காமராஜ், ஏறக்குறைய ஒன்பதரை ஆண்டுகள் செங்கோலாச்சித் தமிழக மக்கள் வாழ்வுத் துறைகளைப் பசுமையாகக் குளிர வைத்துக் கொண்டிருந்தார். தண்ணீர் வாசனையால் தளிர்க்கும் இளமரமாக, தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி, தலைவர் காமராஜ் தொண்டுகளால் வளர்ந்தது! அதனால், தனிப்பெருந் தலைவராகி அரசியல் வித்தகரானார்: மத்திய ஆட்சியிலே அன்று பிரதமராக வீற்றிருந்த ஜனநாயக சோசலிசப் பிதாமகனான மனிதருள் மாணிக்கம் நேரு அவர்களின் பேரவாவால், திரு. காமராஜ் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக்கப்பட்டார்! தமிழர்களுக்கு அந்தச் செய்தி, செந்தேனாக, செவ்வாழையாக இருப்பினும், தண்ணிர் பாய்ந்து பாய்ந்து கற்களாகிய நாங்கள் குழிகளானதைப் போலல்லவா, எம் அரசியல் வாழ்வு மேடு பள்ளங்களாகத் தேய்ந்து போகிறது. தமிழர் தம் தலைமகனாக எம்மிடையே நடமாடிய ஒரு செயல் வீரம், இன்று டெல்லி செல்கின்றதே என்ற வருத்தம் கவலை - கலக்கம் தமிழகக் காங்கிரஸ் தொண்டர்களிடையே சூழ்ந்திருக்கிறது! இருப்பினும், பரந்த பரத கண்டத்தை ஆட்சி புரிகின்ற ஒரு பேரியக்கத்திற்கே தலைவராக ஒரு தமிழன் பொறுப்பேற்றுச் செல்கிறாரே, என்ற அமிழ்தொத்த பேறு கண்டு அவர்கள் எல்லாம் ஆறுதலைடைந்தார்கள்! களிப்புக் கடலில் தமிழர் விழா! தமிழர் விழா தமிழகமெங்கும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள், பட்டி தொட்டிகளிலும் சிற்றுார் பேரூர்களிலும், தலைவர்காமராஜ் புவனேஸ்வரம் புறப்படும் நன்னாளைத் தமிழர் தம் திருவிழாவாகக் கோலாகலமாகக் கொண்டாடத் தயாரானார்கள் தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரை நோக்கிப் புறப்பட்ட ரயில் வண்டிகளிலே, அவர்கள் மூவண்ணக் கொடிகளை ஏந்தியவாறே புறப்பட்டார்கள்.