பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 215 சுந்தரராஜ ஐயரின்கிராமத்திற்குச்சென்றதும், அரிசனவிடுதிக்குச் செல்லாமல் இரயிலுக்குக் காந்திஜி சென்றதும், அப்போது பெரிய கருத்து வேறுபாடுகளுக்கு இடம் அளித்தது. இரயில் எப்போது பழநியிலிருந்து புறப்படுகிறது என்பது தெரியாததன் காரணமாகக் காமராஜ் தனி இரயிலில் போக முடியவில்லை. அண்ணலுடைய வருகை ஏற்பாடுகளில் தொண்டாற்றிய ஊழியர்களை, அவர்சந்திப்பதாக இருந்தது. ஆனால், அவர்களுக்குக் காந்திஜியைக் காணும்பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால், இராஜாஜியும் அவருடைய ஆதரவாளர்களும், காந்திஜியைக் காமராஜூம், காமராஜருடைய ஆதரவாளர்களும் அணுக விடாமல் திட்டமிட்டுத் தடுத்து விட்டதாக ஒருபலமான குற்றச்சாட்டு எழுந்தது. காமராஜ் பழநியிலிருந்து அந்த இரயிலில் போகாது, திண்டுக்கல் வரைகாரில் சென்று அந்த இரயிலில் ஏறிக்கொண்டதை, அப்போது சென்னை அரசு இந்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையிலேயே குறிப்பிட்டது என்றால், இந்தக் கருத்து வேறுபாடு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை ஒருவாறு யூகித்திருக்கலாம் என்று எழுதியுள்ளார் அவர் ஒரு முறைக்கு மும்முறைப் படித்துப் பார்க்க வேண்டுகிறோம் இக்கட்டுரையை பிறகு சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்! இதில் காந்தியடிகள் எடுத்த நடவடிக்கை என்ன? யாரைச் சார்ந்திருந்தார்? இராஜாஜியிடம் எவ்வளவு பரிவு காட்டினார்? காமராஜரிடம் எவ்வளவு எரிந்து விழுந்தார்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய சம்பவங்களாகும்? காந்தியடிகள் தனது வார்தா ஆசிரமம் சென்றதும், பியாரிலால் என்பவரை ஆசிரியராகக் கொண்ட 'ஹரிஜன் பத்திரிக்கையில், 10-2-1946 இதழின் முதல் பக்கத்தில் "Curius" எனும் தலைப்பில், ஒரு கட்டுரை வந்தது! அந்தக் கட்டுரை, 5-2-1946 அன்று தமிழ்நாட்டை விட்டு அவர் வார்தா சென்று கொண்டிருந்தபோது காந்தியடிகளால் எழுதப்பட்டது. அதில் காந்தி எழுதுகிறார்: 'பழநி கோவிலில் காமராஜரும் என்னுடன் தான் இருந்தார். இராஜாஜியும் கோபாலசாமியும்தான் என்னுடைய பயணத்தில் மிக