பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தேசியத் தலைவர் காமராஜர் நெருக்கமாக இருந்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள்தான் அதை ஏற்பாடு செய்தது. 'இராஜாஜி, என்னுடைய நீண்ட கால நண்பர்களிலே ஒருவர். 1942ஆம் ஆண்டில் என்னுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் என்பதை நான் அறிவேன். "அவருக்கு எதிராக, சிறிய பிறரை உள்ளே அனுமதிக்க colouhling, (pl. Óláfill col_3&Qp (älsälä)Clique small exclusive party ஒன்று இருப்பதைக் கண்டு வேதனை அடைந்தேன். 'சென்னையிலுள்ள அதிகாரபூர்வமான காங்கிரஸ் கட்சியில், இந்தக் குழு கணிசமான செல்வாக்குப் பெற்றிருக்கிறது. (காமராஜருக்குத் தொண்டர்கள் பலமும் - செல்வாக்கும் உள்ளதைத்தான்.அவர் இப்படிச்சொல்கிறார்.) பெசவாடாவிலிருந்து (விஜயவாடா) ரயில் கிளம்பியதும் ஏ.சுப்பிரமணியம் என்பவரால், இந்துஸ்தானியில் எழுதப்பட்ட ஒரு குறிப்பு, காந்தியிடம் கொடுக்கப்பட்டது. அதில், சென்னைக்கு காந்தி வந்த நோக்கமே இராஜாஜியைப் பிரதமராக்க வேண்டுமென்ற குறிக்கோளுடன்தான், என்று ஆந்திரப் பிரதேசத்தில் பரவலாக நம்பப்படுகிறது. காங்கிரஸ்காரர்கள் பலர் இந்த மாதிரியான பிரசாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இவைகளைப் பற்றி உங்களது கருத்துக்களைகூற வேண்டுமென்று எழுதப்பட்டிருந்தது. அதனை வாங்கிப் படித்துத் தெரிந்துகொண்ட காந்தி, பெசவாடாவிலிருந்து ரயில் கிளம்பியதும் தொடர்ந்து எழுதத் தொடங்குகிறார். இதோ அவர் எழுதியவை: 'நான் சிறையிலிருந்து விடுதலையானவுடனே காங்கிரஸ் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இறங்க வேண்டுமென்ற எண்ணம் வருவதற்கு முன்னதாகவே என்னுடைய இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. ஹிந்தி பிரசார சபையின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்திற்கு வந்தேன். வரும் வழியில் எதேச்சையாக, மதுரை, பழநி கோவில்களையும் பார்த்தேன்' இராஜாஜி பிரதமராவதற்கும், என்னுடைய பயணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதிய காந்தியடிகள், இராஜாஜியைப் புகழ்ந்து எழுதுகிறார். பிறகு மேலும் எழுதுகிறார்...!