பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 21 7 'நான், சவால் விடப்படுவதால் தென்னகத்தின் தலைமைக்கு இராஜாஜிதான் மிகச் சிறந்த நபர் என்று சொல்வதிலே எனக்கு ஒருவிதத் தயக்கமும் இல்லை. என்னுடைய கையில் அதிகாரம் இருக்குமானால் எனக்கே பதவியை நான் அளித்துக் கொள்ளா விட்டால், நான் இராஜாஜியைத் தான் பதவி ஏற்றுக்கொள்ள அழைப்பேன்.” (இவ்வாறு தனது உள்ளக் கிடக்கையை ஒளிவு மறைவின்றிச் சொல்லிவிட்டு ஒப்புக்காகக் காந்தி தொடர்கிறார்) 'இந்த முடிவு பிரதேசக் காங்கிரஸ் கமிட்டிக்கும், இறுதி யாகக் காங்கிரசின் செயற்குழுவிடமும்தான் உள்ளது' என்றார்காந்திT. காந்தியடிகளின் இந்த அறிக்கையைக் கண்டதும் அதிர்ச்சி யடைந்தார்காமராஜ். "இது தன்னையும் தன்னைச்சார்ந்தோரையும் அவமானப் படுத்துவதற்காகவே கையாளப்பட்டிருக்கிறது” என்று, 'காங்கிரசின் பார்லிமெண்டரி போர்டில் பணியாற்றுவது இனியும் முறையல்ல என்று சொல்லிக்காமராஜர்தனது பதவியை ராஜிநாமா செய்தார்: 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகார பூர்வமான தலைவரைத் தான், நான் விதிமுறைகளுக்கேற்ப சட்டமன்ற ஆட்சிக்குழுவை நியமித்தேன், காந்தியடிகளின் சுற்றுப் பயணத்தின் போது உடனிருந்தேன். அப்போதெல்லாம், காந்திஜியின் கூப்பிடு தூரத்தில் இருந்த என்னை அழைத்து என்னிடம் இதுபற்றி ஒரு வார்த்தை கூட கேட்காத காந்தி, இப்படிப்பத்திரிகையில் திடீரென்று எழுதியிருப்பது என்னைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது என்பதால் ராஜிநாமா செய்கிறேன் - என்று 1946-ஆம் ஆண்டு, பிப்ரவரி 12-ஆம் நாள் அறிவித்தார்காமராஜ்! ('- திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய கதை' பக்கம் 135 காங்கிரஸ் நூற்றாண்டு விழா - மலர்) தலைவர்காமராசரும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேரும்; ராஜிநாமா செய்ய முன்வந்தபோது, 1946-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்தெடுக்கக் குறுகிய கால அவகாசமே இருப்பதால், கடமை உணர்வின் அடிப்படையில் அந்த நால்வரை ராஜிநாமா செய்ய வேண்டாமென்று காமராஜர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்கள் தொடர்ந்து பதவி வகித்தனர்.