பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தேசியத் தலைவர் காமராஜர் காந்தியடிகள் காமராஜரைக் குறித்துச் சொன்ன கருத்து தவறானது என்றும், கிளிக் என்று காந்தியடிகள் கூறியதைத் திரும்பப் பெறவேண்டுமென்றும், காந்திடியகளுக்குத் தந்திகளும் - கடிதங்களும் தமிழகத்திலே இருந்து சென்று குவிந்தன: காமராஜ் அணியைச் சார்ந்த டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு அவர்கள், காந்தியடிகள் கிளிக் என்று எழுதியதைக் குறித்து, ஒரு கடிதம் அண்ணல் அவர்களுக்கு எழுதினார். காந்தி தர்மத்திலும், காங்கிரஸ் கட்சித் திட்டத்திலும், தென்னாட்டில் தூய்மையான பற்றுடன் உழைத்து வருபவர் காமராஜர் ஒருவர் அவர், மக்கள் சக்தி பெற்ற தமழகக் காங்கிரஸ் தலைவர்களில் முன்னணியில் இருக்கின்றார் உயர்தரமான நாடார் அவர்களைப் பற்றி தாங்கள் தவறாக எழுதியது நல்லதல்ல; இத்தகைய விவகாரத்தில் தாங்கள் தலையிடாமல் இருப்பது நல்லதென்பதைத் தங்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் - என்று நாயுடு அவர்கள் எழுதினார்கள்: உடனே, மகாத்மாகாந்தியடிகள்டாக்டர்.பி. வரதராஜுலு நாயுடு அவர்களுக்கு ஒரு தபால் கார்டில், "சரி, அப்படியே செய்கிறேன். நாடார்தகராறில் நான் இனி ஈடுபடுவதில்லை” என்று பதில் கடிதம் எழுதினார்: இதற்கிடையில், பட்டாபி சீதாராமையா அவர்கள், காந்தியடிகளை நேரில் கண்டு, தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கட்சியின் நிலை, காமராஜ் வலிமை, ஆகியவற்றை விளக்கினார். காந்தியண்ணல் 10-2-1946-ல் எழுதிய கடிதம், தமிழ் நாட்டையும் - இந்தியாவையும், தலைவர்களிடையிலும் - தொண்டர்கள் மத்தியிலும் ஒரு பெரும் குழப்பத்தையும், கலவரத்தையும் உருவாக்கி விட்டது. காங்கிரஸ் கட்சியையும், தனது தலைமையையும் பின் பற்றுகின்றவர்கள், அவர்கள் தலைவர்கள் ஆனாலும் சரி - தொண்டர்கள் ஆனாலும் சரி, அவர்களிடத்திலே சிறு குறைகளைக் கண்டாலும் உடனே கண்டித்துத் திருத்துகின்ற மனப் போக்குடையவர்காந்தியடிகள் அவ்வாறு திருத்துகின்றபோது, மனிதநேயத்தால் பாதிக்கப்பட்ட வர்கள், மனம் புண்பட்டு, அவர்கள் காந்தியடிகள் கூறுகின்ற தவறுக்கு மனம் திருந்தி வருத்தப்பட்டால், அதை அவருக்குத் தெரிவித்தால், காந்தியடிகள் தனது மனதைத் திருத்திக் கொண்டு