பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 219 வருத்தப்படும் சுபாவமுடையவர்: தவறுகளே நடவாத சம்பவங்களிலே, தனது தவறால் மற்றவர் மனம் புண்பட்டால், அதை அந்த அடிகள் அறிந்தால், உடனே வருத்தக் கடிதமே எழுதி, மன்னிப்பும் கேட்பார் இவையெல்லாம் தன்னைத்தானே உணரும் தனி மனித அறிவின் அருளாகும்! காந்தியடிகள்தலைவர் காமராஜரைக் கிளிக் என்று எழுதிய பின்பு, அதன் விளைவுகளை உடனே உணர்ந்த பின், 24-2-1946 அன்று மீண்டுமோர்கட்டுரையை அரிஜன் இதழில் எழுதினார்! அந்தக் கட்டுரைக்கு 'About Rajai" என்று பெயர் சூட்டி, அதில் தலைவர்காமராஜ் அவர்கள் வெற்றியின்ரகசியம் என்ற பொருள்பட காந்தியடிகள் எழுதுகிறார் படியுங்கள்: 'நான் தென்னகத்தின் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது எனக்குச் சவால் விடப்படவில்லை என்றால், நான் அமைதியாக இருந்திருப்பேன். அந்தச் சிறப்பு ரயிலில் என்னோடு கூட இருந்தவர்களிடம் நான் பேசவில்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.' "I must admit that i did not talk to those who were with me in that special train. என்பதைக் காந்தியடிகளே ஒப்புக் கொண்டார். ' இரண்டு மூன்று நாட்களாகக் காந்தியடிகள், தனது தனி ரயிலில் உள்ளதமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவரைப் போன்ற முக்கியத் தலைவர்களிடமே, ஊமையாக இருந்ததற்குக் காரணம் யாரோ! தேசப் பிதாவான உத்தமரை இவ்வாறு ஆட்டிப் படைத்த சக்தியைக் காந்தியடிகளே பகிரங்கமாகக் கூற மனமில்லா விட்டாலும், "நான் பேசவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்" என்ற காந்தியடிகள் சாட்சியமே, அப்போது ஆமையாக அடங்கிக் கிடந்த அரசியல்வாதிகளுக்கு பக்க பலமாகக் காட்சியளிக்கிறது. காந்தியடிகள் மனச்சாட்சியின் திறவுகோல்' என்ற சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரி அவர்களின் எதிர்ப்புகளை மூன்று முறை சமாளித்து வெற்றி பெற்றவர் பெருந்தலைவர் காமராஜ்! அதனால்தான், அதே சக்கரவர்த்தி அவர்கள் மனம் திறந்து தலைவர் காமராஜரைப் பாராட்டும் போது, 'காமராஜ், விவேகமுள்ள தகுதி வாய்ந்த, நாணயமான மனிதர்' என்று புகழ்ந்தார்.