பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 தேசியத் தலைவர் காமராஜர் 'இதோ காமராஜர் இருக்கிறார்!’ என்ற நூலை எழுதிய டி.ஆர். வி. நாராயணசாமி அவர்கள், பக்கம் 24-ல் கீழ் க் கண்டவாறு பாராட்டுவதைப் படியுங்கள்! 'காமராஜரை, மகாத்மா காந்தியைக் கொண்டு சிதைத்து விடலாம் என்று சதி செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்; காமராஜரின் தூய்மையான தொண்டு காந்தியையும் வென்று விட்டது கண்டு கதிகலங்கினார்!’ 'காமராஜரின் இந்த வெற்றி அவர் மற்ற எல்லா வெற்றிகளை யும் விடத் தனிச்சிறப்பு வாய்ந்தது. இது காந்திய சகாப்தத்தில் ஒர் உண்மையான காந்தீயத் தொண்டன், எப்படி மகாத்மாவையும் வெற்றி கொள்ள முடியும்; முடிந்தது என்பதை மெய்ப்பித்துக் காட்டியது.” காமராஜர் அவர்களை மட்டும்தான் காந்தியடிகள் இவ்வாறு கிளிக் என்று எழுதி, அவர்மனதைப் புண்படுத்தி விட்டார் என்பது மட்டுமல்ல. இதோ மற்றொரு சான்று. காந்தியடிகள் கூறிய லோஃபர் என்ற சொல்? பம்பாய் மாநிலத்திலுள்ள ஃபெய் ஸ்பூர் எனும் சிற்றுரிலே 1937-ஆம்ஆண்டு, ஐம்பதாவதுகாங்கிரஸ் மகாசபை கூடியது. பண்டித ஜவகர்லால் நேரு அந்த மகாசபைக்குத் தலைமை வகித்தார். ஒவ்வொரு மாநாட்டிலும் கண்காட்சிக்காகக் கிராமப் பொருட் காட்சிகளை உருவாக்கி, மாநாட்டிற்கு வருவோர்களிடம் விற்பனை செய்து, கிராமப் பொருளாதாரத்தை வளர்க்கும் வழக்கம், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு! அதனைப்போல, ஃபெய்ஸ்பூர் மாநாட்டிலும், கிராமப் பொருட்காட்சி சாலை நடந்தது. தமிழ்நாட்டைச்சேர்ந்த கவிஞர் அ. அய்யாமுத்து என்ற பிரபலக் காங்கிரஸ்காரர் கதர் விற்பனை செய்யும்தமிழகப்பொறுப்பை ஏற்று, அதை அகில இந்திய அளவில் விற்பனைசெய்து வந்தார். வழக்கம்போல அந்த மாநாட்டிலும் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் கதர்த் துணிகளைத் தனது நிர்வாகி மூலம் அனுப்பி இருந்தார். ஆனால், அவர் போகவில்லை. தனக்குப் பதிலாக செல்லசாமி என்ற ஊழியரை அந்த மாநாட்டிற்கு அனுப்பினார். "அந்த ஊழியர், மாநாட்டு விற்பனையை முடித்துக் கொண்டு, 20-1-37அன்று கோவைக்குத் திரும்பி வந்தார். கோவை அய்யாமுத்து