பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 22? அவர்களைக்கண்டு, 'காந்தியடிகள் உங்களைப் பற்றி மிகக் கேவலமான கருத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு அவர் அங்கே என்ன நடந்தது?’ என்று அந்த ஊழியரைக் கேட்டார். ஃபெய்ஸ்பூரில், நமது கதர்விற்பனைக் கடைக்குக் காந்தியடிகள் வந்தார். வந்ததும், அய்யாமுத்து எங்கே?' என்று என்னைக் கேட்டார். 'அதற்கு, நான் அவர் வரவில்லை என்றேன். உடனே அவர், "Ohheistofa" என்று கூறிவிட்டுப் போய்விட்டார். அதைக் கேட்ட எனக்கு மிகவும் வருத்தமாயிருந்தது” என்றார்.அந்த ஊழியர் அய்யாமுத்துவுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னைப் பற்றிக் காந்தியடிகளிடம் பலர் பலவிதமாகக் கோள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்! அதன் விளைவாகத் தான் காந்தியடிகள் இவ்வாறு கூறி விட்டாரோ என்று எண்ணினேன்.” மேலும் அய்யாமுத்து சொல்கிறார் கேளுங்கள் செல்லசாமி என்ற அந்த ஊழியன், “என்னிடம் மட்டும் காந்தியடிகள் கூறிய லோஃபர் என்ற வார்த்தையைக் கூறி நிறுத்திக் கொள்ளவில்லை. கதர்க் கடையிலும், அதன் காரியாலயத்திலும் பணியாற்றிக் கொண்டிருந்த அனைவரிடமும் அதை அப்படியே கூறிவிட்டான்! 'சங்கதி கேட்டீர்களா?' என்று ஒவ்வொருவரும் என்னிடம் துக்கம் விசாரிக்க வந்து விட்டார்கள். 'அடுத்த நாள், நான் காந்தியடிகளின் நண்பரான சங்கர்லால் பங்காருக்கு, மகாத்மா காந்தி என்னை ஒரு லோஃபர் என்று கூறியதாக, பெய்ஸ்பூருக்கு நான்அனுப்பியிருந்த செல்லசாமி என்ற கதர்விற்பனைத் தொண்டர் தெரிவிக்கிறார்!" இது உண்மையாய் இருக்குமானால், நான் தமிழ் நாட்டுக் கதர் விற்பனைக் காரியாலயத்தின் தலைவராய் பணிபுரிந்து வருதல் தகுமா? என்று, சிந்திக்க வேண்டியவனயாய் இருக்கிறேன்.” தாங்கள் மிக்க அன்புடன் என்னை இந்த மனவேதனையினின்று மீள உதவும்படி கோருகிறேன் என்று கடிதம் எழுதினேன். சரியாய் ஏழு நாட்களுக்குப் பிறகு, வார்தாவிலே உள்ள காந்தியடிகளாரிடமிருந்து கீழ்க்கண்ட கடிதம் எனக்கு வந்தது. 'சங்கர்லால் உங்கள் கடிதத்தின் நகல் ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தக்கடிதம் உணர்ச்சிவசப்பட்ட உங்கள்மனக் கவலையைக் காட்டுகிறது (Hysterical)