பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தேசியத் தலைவர் காமராஜர் 'உங்களிடம் நகைச்சுவை உணர்ச்சி இருப்பதாக நான் எண்ணி மகிழ்ந்திருந்தேன். ஆனால், நான் அவ்வாறு மதித்தது தவறென இப்போது உணர்ந்து கொண்டேன். "நான் அய்யாமுத்து என்று கூப்பிட்டதும், அந்தத் தொண்டன், தான் அய்யாமுத்து அல்லவென்று தெரிவித்தான். நான் உங்களுக்கு எனது பாராட்டுதலை மிக நாசுக்காகத் தெரிவித்தேன்." அந்தப் புகழ்மாலை இதுதான்! 'திருப்பூரில் உங்களுக்குள்ள கடமையைப் புறக்கணித்து விட்டு, நீங்கள் ஃபெய்ஸ்பூர் வருவது அவசியமென்று கருதவில்லை என்ற எண்ணத்தில் நான் அவனோடு சிரித்துக்கொண்டே வேடிக்கையாகப் பேசினேன். 'அய்யாமுத்து எதற்காக இங்கு வரவேண்டும்? உன்னை இங்கு அனுப்பிவிட்டு அவர் திருப்பூரில் ( is Loafering about) அலைந்து கொண்டு திரிகிறார்... என்று கூறினேன்.” 'அந்த தொண்டனுடைய முட்டாள்தனத்தை என்னால் மன்னிக்க முடியும். ஆனால், உங்களை நான்மன்னிக்க முடியாது.” "அவனிடம் நீங்கள், பாபு சொன்னதை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஃபெய்ஸ் பூருக்குப் போகாததை அவர் பாராட்டியிருக்கிறார் என்று கூறியிருக்க வேண்டும்.” "இந்தக் கடிதம் இப்போது உங்களுக்குப் புரிகிறதா? உங்கள் மன வேதனையைப் போக்க உதவுகிறதா? என்று நீங்கள் சொல்ல வேண்டும்.” 'உலகத்திலுள்ள கவிகள்எல்லாம் என்னசொல்லி இருக்கிறார்கள் என்று உங்களால் தெரிந்து கொள்ள முடிகிறதா?” 'அதாவது, மனிதன் தனது இன்ப துன்பங்களைத் தானே உருவாக்கிக் கொள்கிறான்.” உங்கள் ԼIITւյ இந்த கடிதத்தை கோவையில் நான் பெற்றதும், காந்தியடிகள் மனித நேயத்தை மதித்து, அந்தச் சம்பவத்தை அப்போதே மறந்து மீண்டும் காங்கிரஸ் கட்சிப் பணிகளையும், கதர்த் துறை விற்பனைகளையும்ஆற்றி வந்தேன். இவையே பின் ஐயாமுத்து கூறியவை.