பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 223 1946-ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலுக்குரிய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளைக் காமராஜ் அவர்களைத் தவிர, ஆட்சிக் குழுவில் அங்கம் வகித்த மற்ற உறுப்பினர்கள்தான் செய்தார்கள்! ஆட்சிமன்றக் குழு தேர்வு செய்த வேட்பாளர்கள், அங்கீகாரம் பெறுவதற்கான பட்டியல் சர்தார் வல்லபபாய் பட்டேலிடம் அனுப்பப்பட்டது. அந்த வேட்பாளர்கள் பட்டியலுடன் எம். பக்தவத்சலம், திருமதி ருக்மணி லட்சுமிபதியும் பம்பாய் சென்றார்கள். சர்தார்வல்லபபாய் படேலும், காமராஜரும் அவர்களை வருமாறு அழைத்ததற்கேற்ப தலைவர்காமராஜரும் சென்றார். ஆனால், பட்டியல் மேலிடத்தின்அங்கீகாரம் பெறும்வரை, அவர் சர்தார் படேலைப் பார்க்க மறுத்துவிட்டார். தமிழகக் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலுக்கு மேலிடம் அங்கீகாரமளித்த பின்புதான், காமராஜர் படேலைச்சந்தித்துச்சென்னை திரும்பினார். தேர்தல் வேட்பாளர் பட்டியலில், ராஜாஜி தனக்கு வேண்டியவர்கள் பெயர்களை எல்லாம் சேர்த்திருந்தார். இருப்பினும், தாம் பிரதமராகவரமுடியுமாஎன்ற சந்தேகமும் அவருக்குப் பலமாக இருந்தது! சென்னை மாநிலத்தின் முதலமைச்சருக்கு வெள்ளையர் ஆட்சியில், 1952-ஆம் ஆண்டுவரை பிரதம மந்திரி என்று பெயர்: அந்த பிரதம மந்திரி பதவிக்குத்தான், காந்தியடிகள் கருணையோடு, காங்கிரஸ் மேலிட ஆசியோடு இராஜாஜி போட்டியிட்டார் என்ற செய்தி மக்களிடையே பரவலாகப் பேசப்பட்ட நேரம் அது! 1952-லிருந்து இப்போது பிரதம மந்திரி என்ற பெயர் தலைநகர் டில்லியிலுள்ள மத்திய மந்திரிசபைத் தலைவருக்குத்தான் உண்டு. மற்ற மாநில அமைச்சர்சபைத் தலைவர் முதல்வர் எனப்படுகிறார். ళ్ల ఫ్ల ఫ్లో ఫ్లో