பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ பிரகாசம் பிரதமராக காந்தியடிகள் எதிர்ப்பு! காமராஜ் - காந்தியடிகளுக்கிடையே நடைபெற்றக் கிளிக் போராட்டத்தைத் தொடர்ந்து, மதுரை மாநகரில் இராஜாஜிக்கு எதிராகப் பெரிய கலவரமும் - குழப்பமும் ஏற்பட்டன. தமக்கு விரோதமாகத் தோன்றியக் கலவரச் சம்பவங்களைத் தடுத்திடத் தம்மால் முடியவில்லை என்பதை இராஜாஜி வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். ஆலகால விஷம்போல அந்த எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது என்றும், அதனால், தாம் விலகிக் கொள்வதாகவும் கூறி ஓர் அறிக்கையை விட்டு விட்டுக் காங்கிரசிலே இருந்து விலகிக் கொண்டார்.இராஜாஜி. 1946-ஆம் ஆண்டில், அன்றைய சென்னை மாநிலத்திற்குரிய சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அமைச்சரவை அமைக்கும் பெரும்பான்மை பலம் காங்கிரஸ் பெற்றதால், அந்த விவகாரத்தில் மீண்டும் குழப்பம் நிலவியது. இராஜாஜியே சென்னை மாநிலத்தின் பிரதமராகப் பதவியேற்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகத் தலைமையும் அதே கருத்தையே எதிரொலித்தது. ஆனால், சென்னை மாநிலக்காங்கிரஸ் கட்சி உறுப்பினருள் பெரும்பான்மையினர் அந்தக் கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை. டில்லி சென்ற மூவர் குழு! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரான காமராஜ் ஆந்திரக் காங்கிரஸ் கட்சித் தலைவரான டி. பிரகாசம், கேரளக் காங்கிரஸ் கட்சித் தலைவரான மாதவமேனன் ஆகிய மூவரும், டெல்லிக்குச் சென்று சர்தார் வல்லபபாய் படேலைச் சந்தித்து இதுபற்றிப் பேசினார்கள்.