பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 225 காந்தியடிகளைப் பார்த்துப் பேசுங்கள் என்று மூவரிடமும் சர்தார்படேல் கூறிவிட்டார் காமராஜ், காளாவெங்கட்ராவ், கோபால்ரெட்டி, பட்டாபி சீத்தாராமையா, மாதவமேனன், ராஜாஜி ஆகிய ஏழு பேர்களைக் கொண்ட குழு ஒன்று டில்லி சென்று காந்தியடிகளை ஏப்ரல் மாதம் 9 ஆம் நாள் சந்தித்து, சென்னை மாநிலப் பிரதமராக யாரைக்கொண்டு வருவது என்று கலந்துரை யாடினார்கள் பிரகாசத்திற்கு காந்தி எதிர்ப்பு: பிரகாசம் முதல் மந்திரியாக வருவதைக் காந்தியடிகள் எதிர்த்தார். அதற்குக் காரணமாக, 'பிரகாசம் பொது விவகாரத்தில் நேர்மையாக நடந்து கொள்ளாதவர்; அதனால், அவர் சாதாரண மந்திரியாகக் கூட தேர்வு செய்யப்படக் கூடாது' என்று காந்திஜி சற்றுக் கடுமையாகவே கூறினார்: பட்டாபி சீத்தாராமையா, ராஜாஜி, பிரகாசம் இவர்கள் மூன்று பேரில் யாரையாவது ஒருவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கலாம்' என்று திரு. காமராஜ் கூறினார். 'பிரகாசத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பட்டாபி சீதாராமையா, ராஜாஜி இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள்' என்று-காமராஜ் அவர்களிடம் காந்தியடிகள் கருத்துத் தெரிவித்தார். ஜனாப் மெளலானா அபுல்கலாம் ஆசாத்தைக் காமராஜ் குழு ஏப்ரல் 10-ஆம் நாள் சந்தித்து, காந்தியடிகள் தெரிவித்த கருத்தைக் கூறிகலந்து யோசித்தது.அதற்கு அவர்'அந்த மூவரையும் கொண்ட அமைச்சரவையை அமைக்கலாம் என்ற, தமது எண்ணத்தைக் கூறினார். 'இந்தக் கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை' என்று பட்டாபி சீதாராமையா கூறவே, இதற்கு மேல் எந்தப் பேச்சும் அங்கே நடைபெற முடியாது போயிற்று. காமராஜ் - காந்தி கலந்துரையாடல்? பட்டாபி சீதாராமையா தனிமையாகச் சென்று ஏப்ரல் 11ஆம் நாள் காந்தியடிகளைச் சந்தித்தார். இராஜாஜியைச் சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடியுமா? என்று, காந்தியடிகள் பட்டாபியைக் கேட்டார். - அது சந்தேகம் தான்' என்று பட்டாபி சீதாராமையா கூறினார். “எதற்கும் காமராஜ் அவர்களைக் கலந்தாலோசித்தால் முடிவு தெரியும்' என்றார்.அவர்.