பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தேசியத் தலைவர் காமராஜர் காந்தியடிகள் ஏப்ரல் 12-ஆம் நாள், காமராஜ் அவர்களை அழைத்து, தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன? என்பதைக் கேட்டறிந்தார். இராஜாஜியை வேண்டாம் என்றால் விட்டு விடுங்கள் - திரு. பட்டாபியைத் தேர்ந்தெடுத்தால் என்ன?" என்று காந்தியடிகள் காமராஜரைக் கேட்டார். பட்டாபி வெற்றிபெற வேண்டுமனால்,இராஜாஜி, தலைவர் தேர்தலில் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும்’ என்று காமராஜ் அவருக்குப் பதில் கூறினார். 'இராஜாஜியிடம் நான் பேசி சரி செய்கிறேன்; என்றார் . காந்தியடிகள்! காமராஜ் மீண்டும் சர்தார் வல்லபபாய் படேலைச் சந்தித்துக் காந்தியடிகள் கூறிய யோசனையைக் கூறியபின், இராஜாஜியையும் சந்தித்து அதே முடிவை அவர் தெரிவித்தார்: உடனே, இராஜாஜி அவர்களுக்குக் கோபம் வந்தது; நான் முதலமைச்சராகவும் வரக்கூடாது; ஆனால், நீங்கள் யாரை நிறுத்துகிறீர்களோ அவருக்கு மட்டும் நான் ஆதரவளிக்க வேண்டுமா?' என்றார். தில்லியில் இருந்து திரும்பி வந்த டி. பிரகாசம் அவர்கள், தான் முதல் பிரதமராக வரமுடியாமல் காந்தியடிகள் தடுப்பதால், இராஜாஜியாவது பிரதம மந்திரியாக வரவேண்டும் என்று திட்டமிட்டார். இராஜாஜி மந்திரிசபை அமைத்தால் தன்னை ஒரு சாதாரண மந்திரியாகக் கூடவா நியமிக்க மாட்டார்? என்று, அதற்கான வேலைகளிலே ஈடுபட்டார் பிரகாசம். இவர் செய்த இந்தத் திடீர் முடிவு இராஜாஜி எதிர்ப்பு அணியில் பிளவு ஏற்படுத்தியது. அந்தப் பிளவைப் பயன்படுத்தி, பிரகாசமே பிரதமர் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்தார். காந்திக்கு எதிராகச் செயல்பட மாட்டேன்! காந்தியடிகள் பிரகாசம் முதல்வராக வருவதை விரும்ப வில்லை. அவர் கருத்துக்கு எதிராக நான் செயல்பட மாட்டேன்' என்று, காமராஜ் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.