பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 9 தொழிற் சங்க ஜண்டாக்கள், விவசாயிகள் சங்கப் பதாகைகள், பள்ளி மாணவ மாணவிகளின் நன்றி மறவா சீருடைப் பவனிகள், அனைவரும் அவரவர் மகிழ்ச்சிப் பெருக்கைத் தலைவர் விழிகளுக்கு விருந்தாக்கிவிட்டு, கதிரவன் மறையுமுன்னே கலைந்து சென்றனர்! அரசியல் வாதிகளின் அணிவகுத்தக் குழுக்கள், காங்கிரஸ் தொண்டரணிகள் உட்பட அனைவரும், புவனேஸ்வரம் தனி இரயில் புறப்படும் வரை காத்திருந்து, தலைவரை வழியனுப்பி வைத்தனர்! குனிந்து குனிந்து, வணங்கி வணங்கிக் காமராஜ் அவர்களது கழுத்து ஏற்றிட்ட மலர்மாலைகள் பாரம் தாங்காமல், ஆங்காங்கே சிதறிப் பரவிக் குவியல் குவியலாக உதிர்ந்து கிடந்தன - பிளாட்பார மேடையிலே. புவனேஸ்வரம் ஸ்பெஷல் ரயிலில், தலைவர் காமராஜ் ஏறி அமர்ந்தார். அவரோடு புவனேஸ்வரம் போகும் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அவரவர் ரயில் பெட்டிகளிலே உட்கார்ந்திருந்தார்கள்! புவனேஸ்வரம் தனி ரயில் இஞ்சின்முகப்பில், "இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 68-வது மகா சபை ஸ்பெஷல் ' என்று எழுதப்பட்ட வண்ண முகப் போவியம் அலங்காரத்தோடு தொங்கிக் கொண்டிருந்தது. இரயில் நிலைய நடைமேடை எல்லாம், அணிவிக்கப்பட்ட தலைவர்கள், தொண்டர்கள் மலர்மாலைப் பூக்கள் உதிர்ந்து உதிர்ந்து, பூவாடை விரித்தாற் போன்ற நடையாடைப் பூக்கோலமாகத் திகழ்ந்தது! சென்று வா வென்று வா! தொண்டராரவாரப் படைகள் ஒன்றுகூடி "தலைவர் காமராஜ் வாழ்க! தென்பாண்டிச் சிங்கமே, பரணி பாடி வா! கல்விக் கண் தந்த வள்ளலே வாழ்க! வீரத்திருமகனே, சென்று வா! வென்று வா!' என்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தபோது, புவனேஸ்வரம் ரயிலும் குரலெடுத்து ஊதிப் புறப்பட்டது! 1964-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் மூன்றாம் நாள் பின்னிரவு இரண்டு மணிக்கு, புவனேஸ்வரம் நகர் நோக்கிப் புறப்பட்டது காமராஜ் அவர்கள் சென்ற ரயில் வண்டி!