பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 227 முத்துரங்க முதலியாரைத் தேர்தலில் நிறுத்தினால், ராஜாஜி அணி அவரை எதிர்க்காது என்று கருதிய காமராஜ் அவர்கள், முத்துரங்க முதலியாரைப் பிரதமர் தேர்தலில் நிறுத்தினார்: சென்னை மாகாணப் பிரதமர் தேர்தலில் காமராஜ் அவர்கள் சார்பாக சி.என். முத்துரங்க முதலியாரும், எதிர்த்து டி. பிரகாசமும் போட்டியிட்டார்கள்: இராஜாஜி அணியினர் போட்டியிட்ட இருவருக்கும் தங்களது ஒட்டுக்களைப்போடாமல், தலைவர் தேர்தலில் நடுநிலைமை வகித்தார்கள்! அதனால், பிரகாசம் ஏழே ஏழு ஒட்டுக்கள் வித்தியாசத்தில் சென்னை மாநிலப் பிரதமராக வெற்றி பெற்றார். இராஜாஜி அணியினர் மொத்தம் 33பேர்கள். அவர்கள் நடுநிலைமையில் நில்லாமல், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் தேர்தல் என்ற உணர்வோடு நடந்து ஒட்டளித்திருந்தால், முத்துரங்க முதலியாரே வெற்றி பெற்றிருப்பார்! ஆனால், காமராஜ் மேல் ஏற்பட்ட தனிப்பட்ட காழ்ப் புணர்ச்சியே அந்தத் தேர்தலில் தலைதூக்கி நின்றது. காமராஜ் அவர்களால் நிறுத்தப்பட்டதனால்தான், முத்துரங்க முதலியார் தோற்றார்! இந்த முத்துரங்க முதலியார் எதிர்ப்பு, இறுதியில் காந்தியடிகள் எதிர்ப்பாக மாறிற்று! காமராஜ் மேல் வீண்பழிகள்! உண்மை இவ்வாறு இருக்க, அதை மறைக்க, காந்தியடிகளையும் - காமராஜரையும் எதிர்த்து இராஜாஜி அணி நடுநிலைமை வகித்து விட்டு, பிரகாசத்தையும் பிரதமராக வெற்றி பெறச் செய்துவிட்டு, பின்னர் காந்தியடிகள் சொல்லைமீறி இராஜாஜியை உதாசீனம் செய்துவிட்டு பிரகாசத்தைக்காமராஜ் பிரதமராகத் தேர்ந்தெடுத்தார் என்ற பழியை, உள்நோக்கக் கெட்ட பெயரைக் காமராஜர் மேல் இராஜாஜி அணியினர் உருவாக்கி விட்டார்கள். இவ்வாறெல்லாம் குழப்பம் உருவானதற்குப் பிறகு, பிரகாசம் அணிக்குக் காங்கிரஸ் கட்சி ஆதரவு தரக் கூடாது என்று காமராஜ் அவர்களிடம் பிரகாசம் எதிர்ப்பாளர்கள் கூறினார்கள். அதைக் காமராஜ் அவர்கள் ஏற்கமறுத்துவிட்டார். காங்கிரஸ் கட்சி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. காந்தியடிகளுக்குத் திருப்தியில்லாத டி. பிரகாசம் எப்படியோ வெற்றி பெற்றுவிட்டார். அது அவரது திறமை! -