பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தேசியத் தலைவர் காமராஜர் இதற்கு மேலும் காங்கிரஸ் கட்சிக்குள்ளே சண்டை சச்சரவு களையும், பகையுணர்வுகளையும் உருவாக்குவது அழகல்ல - நல்லதல்ல என்ற பெரும் பண்பைக்கூறி, அமைதியாகக் காங்கிரஸ் ஆட்சி நடக்க வழிகாட்டினார் காமராஜ்! டி.பிரகாசம். அமைச்சரவையில் காமராஜ் அணியினர்களும் அங்கம் வகித்தனர். கேரள மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவரான திரு மாதவமேனனை, மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளுமாறு காமராஜ் கேட்டார்: பிரதமர் பிரகாசம், காமராஜருக்கு எதிர்ப்பாக இராஜாஜி அணியைச் சேர்ந்த ராகவமேனனை அமைச்சராக்கினார் பிரகாசம் அமைச்சரவை பின் நாட்களிலே கவிழ்வதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. பிரதமர் பிரகாசம் அமைச்சரவையைக் கவிழ்க்க, தலைவர் காமராஜ் எந்த விதக் காரணராகவும் விளங்கவில்லை. இராஜாஜி அணியைச் சேர்ந்த எந்த ராகவ மேனனை அமைச்சராக்கிட பரிந்துரைத்தார்களோ, அதே அணியினர் டெல்லியிலே உள்ள இராஜாஜி வீட்டில் கூட்டம் போட்டு, பிரகாசம் சபையைக் கவிழ்க்கத் திட்டமிட்டு, நம்பிக்கையில்லாத் தீர்மானம் அவரது அமைச்சரவை மீது கொண்டு வர முடிவெடுத்தார்கள்; பிரகாசம் வீழ்ச்சி! சில காரணங்கள்! 1947-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள், பிரதமர் டி. பிரகாசத்திற்கு எதிராக 25 சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, ஒரு கடடளைக் கோரிக்கையை அனுப்பினார்கள். 'தங்கள் மந்திரி சபைமீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால், சட்டப் பேரவைக் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தை உடனே நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்ர்கள். பிரகாசம்.அமைச்சரவை,அப்போது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சர்ச்சையை உருவாக்கும் மந்திரிசபையாக அமைந்திருந்தது. அதற்கேற்ப, அப்போதைய சென்னை மாநிலத்திலே எல்லா நூற்பாலைகளையும்அவரதுஅரசுமூடிவிடவிரும்புவதாகப் பிரதமர் பிரகாசம் அறிவித்ததும் சர்ச்சைக்குரிய ஒரு காரணமாக அது எதிரொலித்தது. அதனால், சென்னை ஆட்சியின் கரங்களுக்கு உட்படாத புதுக்கோட்டை, புதுச்சேரி, கொச்சி, திருவிதாங்கூர், மைசூர் ஆகிய மாநிலங்களுக்குச் சென்று, புதுமில்களைக் கட்ட, நூற்பாலை