பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 229 முதலாளிகள் திட்டமிட்டார்கள் இந்த எதிர்ப்பும் பிரகாசத்திற்கு ஏற்பட்டு விட்டது. இந்த நூற்பாலை உரிமையாளர்களின் திட்டத்தால், தமிழகத்தில் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும் - தமிழகத் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று தமிழகத்தில் எதிர்ப்புக் குரல் எழுந்தது. பிரதமர் பிரகாசத்தின் மகன், தனது தந்தையின்செல்வாக்கைப் பயன்படுத்தி ஊழல்களிலே ஊடுருவினார் என்ற புகாரும் ஒப்புதலாயிற்று! காந்தி ஆசி பெற கதர்த்திட்டம்! தான்பிரதமரானதைக் காந்தியடிகள் விரும்பவில்லை என்பதை ஏற்கனவே உணர்ந்த பிரகாசம், அவர் பிரதமரானதும் காந்தியடிகளைத் திருப்திப்படுத்த எண்ணினார். அவரது வாழ்த்துதலைப் பெற்றிட, “கதர்த் திட்டம்' என்ற பெயரால், மூன்று கோடி ரூபாயைத் தனது அமைச்சரவை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கி, காந்தியடிகளது ஆசியையும் பெற்றார்: இந்தக் கதிர்த் திட்டத்தால்தான், புதிய நூற்பாலைகளைக் கட்ட அனுமதி கிடையாது என்றும், பழைய நூற்பாலைகளில், கதிர்களை அதிகப்படுத்தவும் முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி, நூற்பாலை உரிமையாளர்களின் எதிர்ப்பையும் பிரகாசம் பெற்றுக் கொண்டார். இவையெல்லாம் போதாதென, தமிழ்நாடு காங்கிரஸ், கேரளக் காங்கிரஸ் அணிகளின் எதிர்ப்புகளையும் பிரகாசம் சேர்த்துக் கொண்டார்: எதிர்ப்புகளிலேயே பிரதமரான பிரகாசம், அதே எதிர்ப்புச் சக்திகளினாலேயே அவரது அமைச்சரவை கவிழ்க்கப்பட்டது. 1947-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் தனது மந்திரி சபையோடு அவர் ராஜிநாமா செய்தார்! ஆந்திரகேசரி டி. பிரகாசம், பிரதமர் பதவியிலே இருந்து விலகியபின், சென்னை மாநிலத்திற்கு யார் பிரதமராக வருவது என்ற போட்டியும் - குழப்பமும் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கட்சியிலே மீண்டும் தலைதூக்கியது. காமராஜ் - கணேசன் போட்டி மர்மம்! இதற்கிடையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக, காமராஜ் அவர்கள் இருந்தது இராஜாஜி அணியினருக்கு ஒருமன நெருடலாக இருந்தது. எப்படி அவரை அந்தப் பதவியிலே இருந்து ஒழித்துக்கட்டு வதென்று இராஜாஜி அணியினர் இரவும் பகலுமாக அடுத்தடுத்துச் சிந்திக்கலானார்கள்.