பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 தேசியத் தலைவர் காமராஜர் 1946-ஆம் ஆண்டு, மே 16ஆம் நாள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தேர்தல் மதுரை மாவட்ட திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றிட ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தன. திருப்பரங்குன்றத் தேர்தலில், இராஜாஜியை எதிர்த்து நின்ற ஒருவரை காமராஜ் அவர்களை எதிர்த்துப் போட்டியிட வைப்பது என்று - இராஜாஜி அணி முடிவெடுத்தது. அதற்குப் பலிகடாவாக சி.என். முத்துரங்க முதலியாரை அணுகி, காமராஜ் அவர்களை எதிர்த்துப்போட்டியிடுமாறு கேட்டனர். அதற்கு அவர் முடியாது என்று கூறிவிட்டார். காரைக்குடி சா. கணேசனை நிறுத்துவதென்று இராஜாஜி அணி சிந்தித்த போது, அவர் காமராஜை எதிர்த்து நிற்பது சந்தேகம் என்ற சிலர் கூறவே, நேரிடையாகவே சா. கணேசனை அந்த அணி சந்தித்து அவரது சம்மதமும் பெற்று விட்டது. இராஜாஜி அணியினர்.அனைவரும் சா. கணேசனை ஆதரித்தனர். தேர்தலும் பரபரப்புடன் நடந்தது 152 ஓட்டுகளை பெற்ற காமராஜ் அவர்கள், இராஜாஜி அணி சா. கணேசன் அவர்களை 62 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வாகை சூடினார்: ஒருநாள், இராஜாஜியிடம் நேரில் பேசிக் கொண்டிருந்த காமராஜ், 'தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலிலே வெற்றி பெற முடியாது என்று தெரிந்த பிறகும் கூட, 90 ஒட்டுக்களைப் பெற்ற சா. கணேசனை நீங்கள் ஏன் நிற்க வைத்தீர்கள்?' என்று சிரித்துக் கொண்டே கேட்டார். 'உங்களை எதிர்த்துப் போட்டியிட எங்களுக்கு வேறு ஆள் கிடைக்கவில்லை. சா. கணேசனுக்குத் தான் போட்டியிட்டதில் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது? வெற்றி அடைந்தால் லாபம் தோல்வியானால் நஷ்டப்பட என்ன இருக்கிறது?’ என்று ராஜாஜியும் அதற்குச் சிரித்துக் கொண்டே பதில் கூறினார்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தேர்தல்களிலும் சரி, தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்கை நிலைநிறுத்துவதிலும் சரி, பிரகாசம் பிரதமர்பதவியை இழந்ததிலும் சரி, காமராஜ் அவர்களை வீழ்த்திட எண்ணற்ற குழப்பங்களை ஏற்படுத்திய போதும் சரி, அவருடைய எதிரிகள்தான் எல்லாவற்றிலும் மண்ணைக் கவ்வினரே தவிர, காமராஜ் அவர்களின் எதிர்காலம் மேலும் மலைமுகட்டு ஒளியாகவே ஒளிர்ந்தது. .. هم.. " س الله... مي به .. يمنية - .. اما".م. >'< >改< >·《 》、歌 莎、歌 * -م ه هے .سه