பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ காமராஜ் தோற்றுவித்த காங்கிரஸ் தொழிற்சங்கம்! இந்திய விடுதலைப்போரின் மற்றொரு திருப்பு முனையாகத் தோன்றியதே காங்கிரஸ் தொழிலாளர் இயக்கம். அந்தத் தொழிலாளர் பிரிவு 1942 ஆம் ஆண்டு, ஆகஸ்டுப் புரட்சிக்கு முன்பே, அகில இந்தியத் தொழிற் சங்கக் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றிருந்தது! ஆண்டாண்டு தோறும் ஒவ்வொரு நகராகக் கூடிய இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்க மகா சபைகள் எல்லாம், தொழிலாளர் நல்வாழ்வுக்காகப் பலமாகப் போராடி வந்தன. குறிப்பாகக் கூறுவதானால், 1920-ஆம் ஆண்டு, சேலம் சி. விஜயராகவாசாரியார் தலைமையில் நாகபுரி நகரில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் மகாசபை, “தொழிலாளர்கள் அனைவரும் அவரவர் நன்மைகளுக்காகத் தொழிற் சங்கங்களை அமைத்துக் கொள்ள உரிமை வேண்டும்' என்று போராடியுள்ளது. தேசியப் பணியில் தொழிலாளர் இயக்கம்! ஆங்கிலேயர் ஆட்சியில், பெரிய பெரிய தொழிற்சாலைகளும், வாணிப நிறுவனங்களும் வெள்ளையர்களாலேயே நடத்தப்பட்டன, நிர்வாகமும் செய்யப்பட்டு வந்தன. சென்னை மாநகரிலே, இவ்வாறு பக்கிங்ஹாம்கர்நாட்டிக்மில்ஸ், புதுச்சேரி ரோடர் மில்ஸ், மதுரை ஹார்வி மில்ஸ், தூத்துக்குடி கோரல் மில்ஸ், சென்னை ஸ்பென்சர் அண்ட் கோ, சிம்சன் கம்பெனி போன்ற பற்பல நிறுவனங்கள் இயங்கி வந்தன. அந்நியர்களின் பொருளாதாரச்சுரண்டலைத்தடுப்பதற்காகவே தோன்றியதுதான் சுதேசி என்ற இயக்கம்! அவர்களின் சுரண்டலைத் தடுப்பதிலே ஈடுபட்ட இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சி, தொழிலாளர்கள் இயக்கத்தையும் தோற்றுவித்தது.