பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தேசியத் தலைவர் காமராஜர் தூத்துக்குடியில், 1908-ஆம் ஆண்டில் நடைபெற்ற கோரல் மில் தொழிலாளர் வேலை நிறுத்தம்தான், இந்தியாவிலேயே முதன் முதலாக நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மகா சபையின் அரசியல் கலந்த வேலை நிறுத்தமாகும். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, மராட்டிய தேசிய மாவீரர் பாலகங்காதர திலகரின் தீவிரவாதக் காங்கிரஸின் தலைவராக அப்போது திகழ்ந்தார்! அவர்தான், அந்த மில்லின் வேலைநிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்தினார். அதற்காக இரண்டு ஆயுட்காலச் சிறைத் தண்டனையை பெற்ற தியாக மாமன்னரானார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவிப்பதிலும் முன்னணியில் நின்றது தமிழ்நாடுதான். 1918 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் நாள் சென்னை தொழிலாளர் சங்கம் துவங்கப்பட்டது. வாடியா அவர்கள் பங்களாவிலே, வி. கலியாண சுந்தர முதலியார், திவான் பகதூர் கேசவப் பிள்ளை, செல்வபதி செட்டியார், இராமாஞ்சலு நாயுடு போன்றவர்கள் கூடி முதல் தொழிற்சங்கத்தை அமைத்தனர். இந்தச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கு பிறகு, எம். அண்ட் எஸ். எம். தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம், மின்சாரத் தொழிலாளர் சங்கம், ஐரோப்பிய வீட்டுத் தொழிலாளர் சங்கம், முடிதிருத்துவோர்சங்கம், வீதி சுத்தம் செய்யும் தோட்டிகள் சங்கம், ரிக்ஷா ஒட்டிகள் சங்கம், நாகப்பட்டினம் காவலர் துறைச் சங்கம், கோவை நெசவுத் தொழிலாளர் சங்கம் போன்ற பற்பல சங்கங்கள் தோன்றின. அந்தச் சங்கங்கள் எல்லாம் தேசிய இயக்கத் தலைவர்களையே தொழிற் சங்கத் தலைவர்களாகவும் ஏற்றுக் கொண்டன. தேசியத் தலைவர்களே தொழிற்சங்க வாதிகள்! கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை, திரு. வி. கலியாண சுந்தர முதலியார், திருமதி டாக்டர் அன்னி பெசண்ட் அம்மையார், திரு.குத்தி கேசவப் பிள்ளை, திரு. சி. இராஜகோபாலாசாரியார், திரு. ஹரி சர்வோத்தம பிள்ளை, திரு.இ.எல்.ஐயர், திரு. செல்வபதி செட்டியார், திரு. இராமஞ்சலு நாயுடு, திரு. பி.பி. வாடியா, டாக்டர் திரு. ராவ்,திரு. எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர், டாக்டர்திரு. பி. வரதராஜலு நாயுடு, திரு. ஆதி நாராயண செட்டியார், திரு. சர்க்கரை செட்டியார் திரு. கஸ்தூரி ரங்க ஐயங்கார், நாகை திரு என். எஸ். இராமசாமி