பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 233 ஐயங்கர், மதுரை திரு ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசியவாதிகளே பெரும்பாலும் தொழிற்சங்கத் தலைவர்களாக அப்போது பணியாற்றினார்கள். சேலம் திரு. சி. விஜயராகவாசாரியார், 1920-ஆம் ஆண்டில் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவரான பிறகு, அவர் தமது தலைமையுரையில் கேட்டுக் கொண்டவாறு, திரு பண்டித ஜவகர்லால் நேரு, திருமதி கவிக்குயில் சரோஜினி தேவியாரின் தங்கையான திருமதி மிருநாளினி சட்டோபாத்தியாயா போன்றவர்கள் ஆங்காங்கே தொழிற்சங்கங்களைத் தோற்றுவித்து, அந்தச் சங்கங்களுக்குரிய தலைமைச்சங்கத்தையும் நிறுவினார்கள். தொழிற் சங்க இயக்கத்தில் ஈடுபட்ட தேசியவாதிகள் எல்லாம், அகில இந்தியத் தொழிற் சங்க இயக்கத்திலும் ஈடுபட்டவர்கள். ஏனென்றால், அவ்வாறு பணியாற்றுவதை இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே - அதுவும், சுதந்திரம் பெறும் தொண்டுகளில் ஒன்றாகவே அவர்கள் கருதினார்கள். இந்திய முன்னாள்குடியரசுத்தலைவராக இருந்ததிரு.வி.வி. கிரி, கோயம்புத்துர் என்.ஜி. இராமசாமி, இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரான ஆர். வெங்கட்ராமன் போன்றவர்கள், காங்கிரஸ் மகா சபையின் தலைவர்களாகவும், தொழிற் சங்க இயக்கங்களின் தீவிரவாதிகளாகவும் முழு மூச்சுடன் பணியாற்றினார்கள். இந்திய நாட்டுத் தொழிலாளர்களின் வறுமையைப் போக்கும் சக்தி ஒன்றே சுதந்திரம்தான் அது தொழிற்சங்கங்களின் பிறப்புரிமை. எனவே, தொழிலாளர்களும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அதற்கான பணிகளை- தேசிய அளவிலான தொண்டுகளை அவர்கள் ஆற்ற வேண்டும் என்று நம்பினார்கள்! 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற தேசியப் புரட்சியின்போது, அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரசின் கீழிருந்த சங்கங்களில் ஒர் இலட்சிய வெறி ஏற்பட்டு, அதுவே நாட்டு விடுதலைக்காக உழைக்கும் தீவிர திருப்பு முனையாகவும் மாறியது! அன்றுவரை, எத்தகைய விடுதலைப் போராட்ட இயக்கங்களைக் காங்கிரஸ் மகாசபை ஆரம்பித்தாலும், அவற்றிற்கு மறைமுக ஆதரவு கொடுத்து வந்த தொழிலாளர் சங்கங்கள், பிறகு 'மக்கள் போர்” என்ற முழக்கத்தை எழுப்பி, விடுதலை இயக்கத்திற்குத் தொழிலாளர் ஆதரவைத் தர மறுத்துவிட்டன.