பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234. தேசியத் தலைவர் காமராஜர் தொழிற் சங்கங்களில் சில, விடுதலைப்போரையும் அதன் இயக்கத்தையும் குறை கூறின! சுதந்திரம், சுதந்திரப்போர், தேசியம், அதன் போராட்ட எழுச்சிப் பணிகள் என்பதெல்லாம், ஐந்தாம் படை வேலை என்று அவை அலட்சியப்படுத்திவிட்டன. ஆகஸ்டு புரட்சியிலே கைதான தேசியத் தலைவர்கள் எல்லாம் நாட்டின் மூலை முடுக்குகளிலே, எங்கெங்கோ, உள்ள முகாம்களில் அவர்களைச் சென்று பார்க்க முடியாக் காராக்கிரகங்களிலே வைக்கப்பட்டிருந்தபோது இந்தத் தொழிற் சங்கங்கள் எல்லாம் ஆமைகளாகி விட்டன: அகில இந்திய தொழிற் சங்கம் என்ற பெயரை வைத்துக் கொண்டு, அகில இந்திய காங்கிரஸ் மகாசபை,நாட்டு விடுதலைக்காக உயிரை, உடலை, உடைமைகளைத் திரணமாக மதித்துப் போராடி ஊசலாடிக்கொண்டிருந்தபோது, அவைஊமைகளாகவே நடமாடின இந்தக்கோழைப்போக்கு, கொத்தடிமை வழக்கம், பிற்போக்குப் பிணக்கு, சிறையிலே வாடிக் கொண்டிருந்த தலைவர்களுக்கும் பொது மக்களுக்கும் தீரா எரிச்சலை ஏற்படுத்தியது. சிறைகளிலே நாம் சித்ரவதையை அனுபவிக்கின்ற இப்போதே, காங்கிரஸ் இயக்கம் சார்புடைய தொழிலாளர்களுக்குத் தனியானதோர் தொழிற்சங்க இயக்கம் இருக்க வேண்டும் என்பது பற்றிச் சிறையிலே உள்ள தலைவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். அதைப் பற்றி ஒருவருக்கொருவர் சிறைக் கூடங்களிலே ஆழமாகக் கலந்துரையாடினார்கள்! 'இந்தத் தொழிற்சங்கத்தலைவர்களுக்குக் காங்கிரஸ் மகாசபைத் தலைவர்கள் முழு ஆதரவு தருவார்களா?' என்ற ஐயப்பாடும் அவர்கள் இடையே எழுந்தது. சென்னை மாநகரில் தேசியத் தொழிற் சங்கம்! 1945ஆம் ஆண்டில், அந்தந்த மாநிலங்கள் தோறும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர்களும் - தொண்டர்களும்பாதுகாப்புக் கைதிகளும் - சிறுசிறு அணிகளாக ஆங்காங்கே விடுவிக்கப்பட்டார்கள்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, ஆங்கிலேயர்களால் அன்று சட்ட விரோதமாக்கப்பட்டிருந்தது. அதனால், சிறை மீண்டு வெளியே வந்தவர்கள் தங்களுடைய அரசியல் பணிகளை இயக்க இடமில்லாமையாலும், ஒர் அரசியலமைப்பும் தங்களுக்கு இல்லாமையாலும் தவித்தார்கள்!