பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 235 அந்நிலையில், தேசியத் தொழிற் சங்கவாதிகள் அனைவரும் ஒன்றுகூடிஇயங்க, காங்கிரஸ் தொழிற்சங்கம் என்ற பெயரில் சிறுசிறு சங்கங்களை அமைத்துக் கொண்டார்கள். சென்னை மாநகரின் கொண்டித்தோப்பு பகுதியிலே கொண்டிச் செட்டித் தெருவிலே உள்ள, எண்.4 என்ற வீட்டில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்தார்கள்! எல்லாத் தொழிற்சங்கவாதிகளும் தினந்தோறும் அங்கே வந்து கூடிப் பணியாற்றும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டார்கள். இந்தப் பணிகளுக்கெல்லாம், பொறுப்பு ஏற்றுக் கொண்ட தலைவர்யார் தெரியுமா? தமிழ் நாட்டின் கடைசி காங்கிரஸ் முதலமைச்சராக 1967-ஆம் ஆண்டுவரை பணியாற்றிய திரு எம். பக்தவச்சலம் அவர்களின் மாமனாரான திரு சி.என். முத்துரங்க முதலியார்தான். அப்போது ஒவ்வொரு நாளும் மாலைதோறும் - மறைந்த அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த திரு.இராஜகோபாலனும், முன்னாள் குடியரசுத்தலைவராக இருந்ததிருஆர். வெங்கட்ராமனும் தான்வந்து கூடுவார்கள்: சிறையிலே இருந்தபோது சிந்தித்தகாங்கிரஸ் கட்சியின்சார்பான தொழிற்சங்கங்கள்அமைப்பு, அதன்ஆக்கப்பணிகள் ஆகியவற்றைப் பற்றி எல்லாம் மற்ற காங்கிரஸ் தொழிலாளர்களோடு கூடிக் கலந்துரையாடி விரிவாக விவாதிப்பார்கள். அகில இந்தியத் தொழிற்சங்கக்காங்கிரசின் கொள்கைகளையும் - அதன் நடவடிக்கைப் போக்குகளையும் விரும்பாதவர்கள் அங்கே நாள்தோறும் வருவார்கள் கூடுவார்கள் பேசுவார்கள் எதிர்கால ஏற்றம் குறித்துத் திட்டமிடுவார்கள்! இந்த நேரத்தில், சிறை மீண்ட திரு காமராஜ் அவர்கள், ஒரு நாள் அந்தக் காங்கிரஸ் தேசியத் தொழிற் சங்க அறைக்கு வந்தார்: வழக்கம்போல அங்கே பணியாற்ற வருகைதந்திருந்த திரு. ஆர். வெங்கட் ராமனையும், பிற காங்கிரஸ் கட்சித் தொழிலாளர் களையும் பார்த்து, 'காங்கிரஸ் கட்சித் தொழிலாளர் பகுதியா? நல்லாச் செய்யுங்க' என்றார். சில மாதங்களுக்குப் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவு என்ற பெயரையும் அந்த இடம் பெற்றது.