பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 தேசியத் தலைவர் காமராஜர் சட்ட சபையில் தொழிற் சங்கம்! சென்னை மாநில சட்டசபைத் தேர்தல், 1946-ஆம் ஆண்டு நடந்தது! நடைபெறப் போகும் அந்தத் தேர்தலில் தொழிலாளர் களுக்கு நான்கு சட்டசபை இடங்கள் ஒதுக்கப்பட்டன: பக்கிங்ஹாம் மில் தொழிலாளர் சங்கம், சென்னை நகரிலே உள்ள ஆலைத் தொழிலாளர்கள் சங்கம், கோவைப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம், ஆகிய நான்கு சங்கங்களுக்காக ஒதுக்கப்பட்டவைதான்.அந்த நான்கு சட்டசபை இடங்கள். தொழிலாளர்கள், காங்கிரஸ் கட்சி மீது பற்றும் - ஆர்வமும் கொண்டு அதன் வளர்ச்சிக்காக நன்கு உழைத்தார்கள். அவர்கள் முழு ஆதரவு எப்போதும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் என்பதை உறுதிப்படுத்தவே, அந்தச் சட்டசபை இடங்களுக்குரிய வேட்பாளர்களாகக் காங்கிரஸ்காரர்களை நியமித்தார்கள் அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், அதன் தலைவரும் - சிறந்த தொழிற் சங்க நிர்வாகியுமான திரு. ப. ஜீவானந்தம் ஒரு தொகுதியிலே சட்டசபைக்குப் போட்டியிட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக, ஒர் ஏழைத் தொழிலாளர் நிறுத்தப்பட்டால்தான், காங்கிரஸ் கட்சி மீதும் மதிப்பும் - மரியாதையும் மக்கள் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில், திரு காமராஜ் அவர்கள், சைதாப்பேட்டைதிரு. கன்னியப்பன் என்ற ஒரு பரம ஏழையைக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தினார். தரித்திர நாராயணரான திரு. கன்னியப்பன், பிரபல தொழிற்சங்கத்தலைவராக அப்போது திகழ்ந்த திரு. ப.ஜீவானந்தம் அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்: அந்த வெற்றி, தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கட்சிக்கும், காமராஜ் அவர்களின் தேர்தல் வியூகத்திற்கும், நாட்டில் ஒரு நல்ல செல்வாக்கையும் - பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது. எந்த அகில இந்தியத் தொழிற் சங்கக் காங்கிரஸின் கீழ் இருந்த சங்கங்கள், காங்கிரஸ் தேசியக் கட்சி நடத்திய சுதந்திரப் போரை ஐந்தாம் படை வேலை என்று ஆகடியம் பேசினவோ, அதே சங்கங்கள் நிறுத்திய சட்டசபை வேட்பாளர்களை, தேசியக் காங்கிரஸ் சார்புடைய தொழிற் சங்க சாதாரண வேட்பாளர்கள் தோற்கடித்து மண்ணைக்கவ்வவைத்த பெருமைதலைவர்காமராஜ்