பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புவனேஸ்வரம் இரயில் ஒடிக் கொண்டிருக்கிறது. அதுவும், தனி இரயில் அல்லவா? தடுப்பாரின்றி, நிறுத்துவாரின்றி, இரவு நேரமானதால், சராசரி வேகத்தோடு ஓடியபடியே இருந்தது! வண்டிக்குள் அமர்ந்திருந்த மாநாட்டு விருந்தினர்கள், தெளியாத தூக்கம் போல் அவரவர் களைப்புகளுக்கு கேற்ப உறக்கத்தில் உழன்றார்கள்! - காமராஜ் சிந்தனை? 'நடந்து வரும் சிங்கம் ஒன்று, தனது பாதையை ஒருமுறை திரும்பி நிமிர்ந்து பார்ப்பதை 'அரிமா நோக்கு என்று தமிழ் இலக்கணம் தன்மானப் பறை தட்டுகின்றது! ஒடும் இரயிலில் ஆடும் சிந்தனைகளோடு, காமராஜ் என்ற அரசியல் அரிமா, தனது கடந்த காலச் சம்பவங்களின் அரசியல் பயணத்தைத் தன்னந் தனியாகப் பின் நோக்க ஆரம்பித்தது! "சாதாரண ஓர் ஏழைக் குடும்பத்திலே பிறந்தோம்! கோடிக் கணக்கான காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிலே ஒருவனாகச் சேர்ந்தோம் தேசத் தொண்டுகளைச் செய்தோம்! கோடிக் கணக்கான அந்தத் தொண்டர்கள், இன்று நம்மை புவனேஸ்வரம் மாநாட்டின் 68-வது காங்கிரஸ் மகாசபைத் தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள் தேர்வு செய்து விட்டார்கள்! ‘என்னசெய்யப் போகிறோம் நாம் இந்தத் தொண்டர்களுக்கும் - பொது மக்களுக்கும் நாட்டிற்கும் - அவர்களுக்குக் கைமாறாக? 'இதயம் பொங்கும் மகிழ்ச்சியோடு அவர்களை இயங்க வைக்க இயலுமா? * 'iரத்தால் விரிந்து விம்மும் மார்புபோல; அவர்கள் இயங்க, வியக்க, விளங்க என்ன செய்ய முடியும் ? எனது பணிகள் நேற்றுவரை, எழுதுகின்றவனிடம் ஒடும் பேனா ஒட்டமாக எதிர்த்தது - ஆதரித்தது - பிரச்னைகளை! பேசுகின்றவனின் நா வைப்போல, நஞ்சுமிழும் இன்றைய அரசியலிலே - நான் வேகத்தோடும், நாணத் தோடும், நயத்தோடும், மக்களை வேட்பமுறச் செய்திட முடியுமா?