பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 தேசியத் தலைவர் காமராஜர் மலைக்காடுகள், ஊர்க்காடுகள், தோட்டத் தொழிலாளர்கள், ஆகியோர் அவரவர்க்குரிய தொழிற் சங்கங்களை அமைப்பதற்கும் - அதைப் பயன்படுத்துவதற்கும் தக்க உதவிகளையும் வழி வகைகளையும் வகுத்தளித்தார்திரு. காமராஜ்! தமிழ் நாட்டில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தை நிறுவியவர். திரு. நாராயணசாமி நாயுடு அவர்கள் ஆவார். ஆனால், 'அந்தச் சங்கத்தைக் கட்டிக் காத்து வளரச் செய்து, எல்லாவிதமான உரிமைகளையும் வழங்கியவர் தலைவர் காமராஜ்தான் என்று நாயுடு ஒருமுறை கூறியுள்ள சான்று ஒன்றே - காங்கிரஸ் கட்சியில் திரு. காமராஜர்தான் விவசாயிகளின் தோழர்: என்ற உண்மை உலகுக்குப் புரிந்தது. திரு. ஓமந்துார் இராமசாமி ரெட்டியார் அமைச்சர் அவையிலே வருவாய்த் துறை மந்திரியாக இருந்தவர் கே. என். வெங்கட் ராவ். தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கும் - பண்ணையாட்களுக்கும் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை என்ற நிலையில், நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தை ஆரம்பித்தார். அவர் செய்து கொண்ட மாயவரம் விவசாயிகள் ஒப்பந்தத்தை" விளக்கமாக எடுத்துக் கூறி, அமைச்சரையும் அழைத்துக் கொண்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, நாயுடு அவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொடுத்தார் தலைவர் காமராஜ்! பிற்காலத்தில் நியாய வாரச் சட்டம்' என்ற ஒரு திட்டத்தைத் தலைவர் காமராஜ் அவர்கள் கொண்டு வந்து, விவசாயிகளுக்குப் போதிய ஆதரவளித்தார். அதனால், ஏழை உழவர் குடிமக்கள், காமராஜ் அவர்களைத் தமது ஒப்பற்ற தலைவராக ஏற்றுப் போற்றி மகிழ்ந்தார்கள். தேசியத் தொழிலாளர் இயக்கத்தில் காமராஜ்! இவ்வாறு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தொழிலாளர் இயக்கப் பகுதியையும் ஓர் அங்கமாக இணைத்து, அதற்கான அனைத்துச் செலவுகளை எல்லாம் ஏற்றுக் காமராஜர் பேராதரவு காட்டினார்: சென்னை மாநகரிலே உள்ள சிம்சன் குரூப் தொழிலாளர்கள் சங்கத்தில் ஏற்பட்ட எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வைத்து, தக்க உதவிகளையும் செய்து, அந்தச் சங்கம் மேன்மேலும் வளர திரு. காமராஜ் வழிகாட்டியாக விளங்கினார்.