பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ઉ9) திருவிதாங்கூர் தமிழர் போராட்ட ஆதரவு! நாங்கள் தமிழர்கள் தாயகத்துடன் ஒன்று சேர்ந்து வாழவிரும்புகின்றோம் எங்களைத் திருவிதாங்கூர் சமஸ்தானம்தாய்த் தமிழகத்துடன் சேர விடாமல்தடுக்கின்றது. தாயைப் பிரிந்த சேயைப் போலத் துடிதுடித்துக் கொண்டு வாழ்கின்றோம். இந்த நேரத்தில் எங்களுக்கு உதவி செய்யாவிட்டால், நாங்கள் என்றென்றும் தமிழ்ப் பண்பாட்டை இழந்து, தமிழ் மொழியை மறந்து, தமிழ்க் குடிமக்கள் என்ற தகுதியைத் தவிக்கவிட்டு அழிந்து விடுவோம்! தாய்த் தமிழகத்துடன் சேர்ந்து வாழ விரும்பும் எங்களை தமிழர்களை- காப்பாற்றுங்கள் கை கொடுத்து ஆதரவு தாருங்கள்!' - என்று, திருவிதாங்கூர் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த எஸ். நாதானியல் என்பவர் 1946-ஆம் ஆண்டு தலைவர் காமராஜ் அவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். திருவிதாங்கூர்தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலிருந்தும்-அங்கே வாழுகின்ற தமிழ் மக்களிடமிருந்தும் ஏராளமான கடிதங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திரு. காமராஜ் அவர்களுக்கு நாள்தோறும் வந்து குவிந்தன. அப்போது திரு. காமராஜ் அவர்களுக்கு ஒய்விலா வேலைகள் இருந்த நெருக்கடியான நேரம். அதனால், அவரால் நேரில் வரமுடியாத ஒரு சூழ்நிலை இருந்தது! 'நீங்கள் சமஸ்தான மக்கள் மட்டுமல்ல! இன்றுள்ள காங்கிரஸ் கட்சியின் அமைப்பில், நீங்கள் எல்லாம் கேரள காங்கிரஸ் கட்சியில்தான் சேரவேண்டிய நிலை இருக்கும் - இதற்குச் சட்டத்தை மாற்ற வேண்டும்.” "மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்படும்போது, நீங்கள் எல்லாம் நிச்சயமாகத் தமிழ்நாட்டுடன்தான் சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள்!"