பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 241 'நான் அங்கேநேரில் வருகை தந்து உங்களுடைய குறைகளைக் கேட்டறிந்து வேண்டிய உதவிகளைச் செய்வேன்.' - என்று, தலைவர் காமராஜ் அவர்கள், திருவிதாங்கூர் தமிழ் மக்களுக்குக் கடிதம் மூலமாக வாக்குறுதி கொடுத்தார்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற தகுதியில், காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தை உடனடியாகக்கூட்டி, "தமிழ்நாட்டை ஒட்டியிருக்கும் திருவிதாங்கூர் தமிழ்நிலப் பகுதிகளைக் காங்கிரஸ் கட்சிப் பணிக்கு ஏற்றவாறு தமிழ்நாட்டின்ஒர்.அங்கமாகச்சேர்த்திட, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி அனுமதியளிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை அப்போது நிறைவேற்றினார்காமராஜர் திருவிதாங்கூரில் பொறுப்பாட்சிப்பிரகடனம்1947-ஆம் ஆண்டு செப்டம்பர்4-ஆம் நாளன்று வெளி வந்தது. வயது வந்தோர்க்குரிய வாக்குரிமையுடன், திருவிதாங்கூர் அரசியல் அமைப்பை மாற்றியமைத்திட, அங்கே தேர்தலும் வந்தது. “எங்கள் இறுதி இலட்சியம், ஒன்று பட்ட ஐக்கியத் தமிழகம்தான்' என்று, தமிழர்கள் தங்கள் தேர்தல் அறிக்கை வாயிலாக அவர்கள் கருத்தை அப்போது வெளியிட்டார்கள். இந்த அறிக்கையைக் கண்ட திருவிதாங்கூர் சமஸ்தானக் காவல் துறையினர் உடனே தடியடி தர்பார்கள், 14 சட்டக் கெடுபிடிகள், கண்ணிர்ப் புகை வீச்சுகள், காவலர்படைக் குவிப்புகள், அடக்குமுறை ஆர்ப்பாட்டங்கள், பொய் வழக்கு ஜோடிப்புகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கட்டவிழ்த்து விட்டனர் - அந்தப் பகுதியிலே வாழும் தமிழ் மக்கள் மீது 'ஒன்று பட்டே தாய்த் தமிழகத்தோடு வாழ்வோம்! இல்லையேல் மாள்வோம்' என்று அங்கே வாழும் தமிழர்கள் வீர சபதம் ஏற்றார்கள். தலைவர் காமராஜ் அவர்களுக்கும் தந்திமேல் தந்திகள் வந்து குவிந்தன! - 'உடனே விரைந்து வாருங்கள்! தவறாமல் புறப்படுங்கள்! தமிழர்கள் உயிருக்கும் ஆபத்து உடைமைக்கும் ஊறு உடனே புறப்படுங்கள்' என்ற தந்திகள் நாள்தோறும் பரவலாகப் பறந்து வந்தன - தலைவர்காமராஜ் அவர்களை நோக்கி. தலைவர் காமராஜ் திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகளைக் காண உடனே விரைந்தார். கிராமம் கிராமமாகச் சென்று, உண்மை என்ன என்பதை அறிந்திட விசாரணை செய்தார். சென்ற இடங்களிலே எல்லாம் தலைவர் காமராஜருக்குத் தடபுடலான வரவேற்புகள். அனாதையாகவிடப்பட்ட குழந்தைகள்