பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 தேசியத் தலைவர் காமராஜர் அருகே வந்து நிற்கும் தாயை அரவணைத்து மகிழ்வதைப் போல தமிழர்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து, தலைவர் காமராஜரிடம் தங்களது குறைகளையும், அங்கே அனுபவிக்கும் கொடுமைகளையும் கூறிக் கூறி ஆராத்துயருற்றனர். இதற்கிடையே 'காமராஜ் வாழ்க! தமிழர் தலைவர் காமராஜ் வாழ்க’ என்ற வாழ்த்தொலிகள் வானை நிமிர வைத்தது! "திருவிதாங்கூர் சமஸ்தானக் காங்கிரஸ் தலைவர்களுடன் நான் பேச்சு வார்த்தை நடத்தினேன். அது இன்னும் முடியவில்லை!" "திரு. பட்டம்தானுப்பிள்ளை, எஸ். நாதானியல் இருவரையும் சென்னைக்கு அழைத்து ஒரு சமரச முடிவிற்கு வர முயற்சிப்பேன்’ என்று, தலைவர் காமராஜ் திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதி வாழ் தமிழர்களை விட்டுப் புறப்படுமுன்பு அவர்களிடையே உறுதிமொழி கொடுத்தார். திரு. பட்டம் தாணுப் பிள்ளை, திரு. காமராஜ் அவர்களைச் சந்திக்க வருகிறேன் என்று குறிப்பிட்ட நாளில் கூறி வரவில்லை. திருவிதாங்கூர் தேர்தல் நடந்தது அடக்குமுறை தர்பார், காட்டு மிராண்டித்தனமானகாவல்துறையினர்வேட்டைகள் அனைத்தையும் தாண்டி, தமிழ் மக்கள் வாழ்வா சாவா? என்ற சூளுரையை ஏற்று, தேர்தலில் ஒரே குறிக்கோளோடு தமிழ் மக்கள் அங்கே வாக்களித்தார்கள். திருவிதாங்கூர் தமிழகம் வெற்றி முரசு கொட்டியது: காமராஜ் அவர்களின் வருகையும் அவர் கொடுத்த தைரிய வாக்கும் தமிழ் மக்களுக்குப் புதியதோர் வீர எழுச்சியை விளைவித்தது! வெற்றிக்கு அவரது வாக்கே வித்தாக அமைந்தது - வியப்பாகவும் அது திகழ்ந்தது. ဒါ့’’ శ్లే ఫ్లో