பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(3ο) கோபுரம்தான் அரசுச் சின்னம்: Tபண்டித நேருவிடம் போராட்டம்! 1947-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சென்னை மாநிலத்தில், தமிழ்நாட்டுக் காந்தி என்று மக்களால் போற்றப்பட்ட ஒமந்துார் இராமசாமி ரெட்டியார் முதலமைச்சர்ஆனார். அவர்தலைமையில் அமைச்சரவையும் உருவானது. 1948-ஆம் ஆண்டிலும், சென்னை மாநிலத்திற்குரிய முதல்வர் தேர்தல் நடைபெற்றது. திரு. டாக்டர் சுப்பராயன் அவர்கள், திரு. இராஜாஜி அவர்கள் ஆசியுடன் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் முன்னாள் முதல்வரான திரு. டி. பிரகாசத்துக்கும் திரு. ஓமந்துார் இராமசாமி ரெட்டியாருக்கும் இடையேதான் கடுமையான போட்டி இருந்தது. இறுதியில், ஓமந்துார் இராமசாமி அவர்களே முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்! ஓமந்துார் திரு. ரெட்டியார், ஓமந்துார் பகுதியில் கிராமம் மணியக்காரராக, இன்றைய வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேஷன் அலுவலரைப்போல, அதிகாரியாகப் பணியாற்றி சிறந்த மக்கள் செல்வாக்குப் பெற்றவர் ஆவார். அவர், திண்டிவனம் வால்டர்ஸ்காட் உயர்நிலைப் பள்ளியிலே படித்தவர். காஞ்சி சங்கர மடத்தின் 68-வது சங்கராசாரியாரான ஜகத்குரு சந்திரசேகரேந்திரசுவாமிகளும், தேனாம்பேட்டையிலே இன்றும் நடைபெற்றுவரும் எஸ். ஐ.இ.டி என்ற மகளிர் கல்விக் கோட்ட உரிமையாளருமான நீதிபதி திரு. பஷீர் அகமத் சையத் என்பவரும் திரு. ரெட்டியாருடன் படித்த மாணவர்களாவர். திரு. காந்தியடிகளால் துவக்கப்பட்ட வேதாரணிய உப்புப் போராட்டத்தில் மூன்றாம் நாள் போரின்தளபதியாகப் போரிட்டுக் கைதான காங்கிரஸ் தியாகியாகத் திகழ்ந்தார் ரெட்டியார்: தலைவர் காமராஜ் அவர்களுக்கு முன்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றிய அனுபவம் உடையவர் அவா!